உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அடுத்து இந்தப் புத்தகம்; அறிவியல் நம் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் வெளியீடு. இது 386 பக்கங்கள் கொண்டது. இதனுடைய விலை. ரூ. 4.80 காசு. 88 பக்கங்களுக்கு விலை ரூ. 5. இது தனியார் வெளியீடு. 386 பக்கங்கள் கொண்டதற்கு விலை ரூ.4.80. நம் தமிழ்நாடு பாட நூல் நிறுவனம். நமது அரசின் முயற்சியால் நிறுவப்பட்ட நிறுவனம்.

அடுத்து, மூன்றாம் வகுப்புப் புத்தகம். புவியியல்; இது தனியார் வெளியிடுவது. மாணிக்கம் கம்பெனி என்ற தனியார் கம்பெனி வெளியிடுவது. இதிலே எந்தவிதமான வண்ணப் படங்களும் கிடையாது. வெளியிலே இரண்டு கலர் படங்கள்தான் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் 44. இதன் விலை ரூ. 1.50 காசு. இதற்கு அரசாங்கம் அடக்க விலையில் தாள் கொடுக்கிறது. அரசாங்கம் அடக்கவிலையில் தாள் கொடுத்தும் 44 பக்கங்களுக்கு விலை ரூ. 1.50. இதைத் தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதே மூன்றாவது வகுப்புப் புத்தகம் தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் வெளியிட்டது. 64 பக்கங்கள், விலை ஒரு ரூபாய். எவ்வளவு அழகான படங்கள்! உள்ளே பல வண்ணப் படங்கள். இவ்வளவு படங்கள் போடப்பட்டது ஒரு ரூபாய் விலை. (குறுக்கீடு: நான் இவைகளை விற்பதற்காகச் சொல்லவில்லை. தங்கமணி அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காகச் சொல்கிறேன்.

இந்தியாவிலேகூட பல மாநிலங்களில் இந்த நூல்கள் வெளியிடுவது தேசியமயமாக்கப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இராஜஸ்தானில் ஒரு பக்கத்திற்கு 1.08 காசு விலையாகிறது. குஜராத்தில் ஒரு பக்கம் 2 காசு விலையாகிறது. இமாச்சல பிரதேசத்தில் ஒரு பக்கத்திற்கு நான்கு காசுகள் விலையாகிறது. தமிழ்நாட்டில் ஒரு பக்கத்திற்கு ஒரே ஒரு காசுதான் விலையாகிறது.

ஆகவே இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் புத்தகங்கள் மிகக் குறைவான விலையில் தரப்படுகின்றன என்ற விளக்கத்தை