உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

347

ரு

1966 பிப்ரவரி திங்களில் பாராளுமன்றத்தில் இரு அவைகளையும் வைத்து குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் மீது மாநிலங்கள் அவையில் அண்ணா அவர்கள் பேசுகிறார்கள். அதையும் இங்கே குறிப்பிட விழைகிறேன்.

"I would request and demand of this Government to repeal Emergency and this D.I.R. They have got enough powers the laws that they have, to deal with any mischief, with any social elements...

Why are they apprrehensive of their own people?...

Therefore, I would demand of this Government that they should forth with lift this Emergency and this D.I.R., and release those are kept in jail... And unless and until they do that.

இதுதான் முக்கியம்

I would not have a claim to decency and democracy. To the public the first and foremost and the one question that they will to answer will be, "Why do you keep this Emergency the D.I.R.?"

அண்ணா வழியைப் பின்பற்றித்தான்,

அன்றைக்கு நெருக்கடி நிலைபற்றி அண்ணா அவர்கள் எந்தக் கருத்தைக் கொண்டிருந்தார்களோ அந்தக் கருத்தைப் பின்பற்றித்தான் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்குழு தீர்மானத்தை வடித் தெடுத்தது.

கம்யூனிஸ்ட் கட்சி 1964-ல் ஒரு கருத்து, 1974-ல் ஒரு கருத்து, 1975-ல் ஒரு கருத்தைக் கொள்ளலாம். ஆனால் திரா விட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் பாரம்பரியம்மிக்க ஒரு கட்சியாகப் பேரறிஞர் அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், நமக்கு உறவாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் நியாயங்களின் தன்மையைப் பார்த்து நம்முடைய கழகத்தின் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று, அந்த அடிப்படை அரசியல் இலக் கணத்தை வகுத்துத்தந்த அண்ணா அவர்கள் அன்றைக்குச் சொன்ன அந்தக் கருத்தின் அடிப்படையில்தான் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு தன்னுடைய தீர்மானத்தை நிறை வேற்றியது.