உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

டாக்டர் ஹண்டே பேசும்போது சொன்னார்கள், செயற் குழுவில் ஒரு தீர்மானம், கடற்கரையில் ஒரு தீர்மானம், நெல்லையிலே ஒரு தீர்மானம், இப்படி ஏன் ஒன்றோடொன்று முரண்பட்டு, பின் வலித்துக்கொண்டீர்கள் என்றெல்லாம் கேட்டார். அவர்கள் கேட்டது எப்படி இருந்தது என்றால், “நீங்கள் இன்னும் வேகமாக அல்லவா போயிருக்க வேண்டும்” (சிரிப்பு) என்று சொல்வதுபோல் இருந்தது. அவரெல்லாம் இங்கே இருந்திருந்தால் அப்படிப்பட்ட யோசனைகளைச் சொல்லி, இன்னும் வேகமாகப் போய்க்கொண்டிருங்கள் என்று சொல்லியிருப்பார் போலும். அந்த அளவிற்கு மத்திய சர்க்கார் மீது அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் இருக்கிறது. மத்திய சர்க்கார் “நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து, நம்மை நெருக்கடியில் விட்டுவிட்டார்களே; அதை எதிர்க்க வேண்டும்;

நம்மால் எதிர்க்க முடியவில்லையே; அப்படிப்பட்ட

தலைமையின் கீழ் நாம் அகப்பட்டுக்கொண்டோமே" என்று வருந்துகிறார்கள்.

டாக்டர் எச்.வி.ஹாண்டே: ஏற்கெனவே நான் பலமுறை இந்த மன்றத்தில் முதலமைச்சருடைய கற்பனைத் திறனைப் பாராட்டி இருக்கிறேன். அந்தக் கற்பனைத் திறனைப் பாராட்டு வதற்கு இதன் மூலம் இன்னொரு வாய்ப்பைத் தந்திருக்கிறாரே. அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் மாறான கருத்து என்பதை மாத்திரம் தெரிவித்துக்கொள்கிறேன்

திரு பெ. சீனிவாசன்: அண்ணா அவர்கள் ராஜ்ய சபை யிலே தன்னுடைய கருத்தை எடுத்துரைத்தார்கள். அதே மாதிரி, நெருக்கடி நிலைமை வந்தவுடனே, நீங்கள் கடற்கரையிலே, பொதுக் கூட்டத்திலே, செயற்குழுவிலே தீர்மானம் போடாமல் இந்த மன்றத்திலே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து கண்டித் திருக்கலாமே

கருணாநிதி:

மாண்புமிகு கலைஞர் மு. போர் வீரனுக்குத் தெரியும், எந்தக் கையிலே வாள் வைப்பது, எந்தக் கையிலே கேடயம் வைப்பது என்று (பலத்த ஆரவாரம்).