உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

காட்டாக நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் இந்த அரசுக்குத் தேவையான யோசனைகளையும் இந்த மாமன்றத்தில் எடுத்து வைக்கத் தவறவில்லை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு என்கின்ற அடிப்படையில் இங்கே நடைபெற்ற விவாதங்களைப் பார்த்து வெளியே உள்ள சிலபேர்கள்கூட, ஏன் இந்த அவையிலே உள்ள வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட, விவாதங்கள் போகிற போக்கைப் பார்த்தால், இரண்டு கட்சிகளும் விரைவில் ஒன்று சேர்ந்துவிடும்போல் இருக்கிறதே என்று எண்ணுகிற அளவிற்கு நடந்த முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதங்கள் நடைபெற்றன. இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் புதிய கட்சி தொடங்கியவர்கள்கூட அதற்கு முன்பு நாம் முந்திக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் கட்சிகளை கலைத்துவிட்டு ஆளும் கட்சியோடு போய் சேர்ந்து கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நாட்டில் நடைபெற்றன.

ஆனால், விவாதங்களில் ஆக்கபூர்வமான யோசனைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கே உரிய கண்ணியத்தோடு கடமையுணர்ச்சியோடு அண்ணா வழியில் இங்கு எடுத்து வைத்ததேயல்லாமல் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்வதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் கொள்கை அளவில் அண்ணா அவர்கள் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலே இல்லை என்பதை ஆளும் கட்சி சந்தர்பங்களில் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

பல

அண்ணா அவர்கள் அவசரகால சட்டத்தை அறவே வெறுத்தவர். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு, ஜனநாயகம் நல்ல முறையிலே வளர்வதற்கு அவசரகாலச் சட்டங்கள் தடையாக நிற்கும், அவசரகாலத்தை நீடித்துக் கொண்டு, ஜனநாயகத்தைப் பற்றியும் பேச ஒரு அரசுக்கு அனுமதியில்லை, முடியாது என்று நாடாளுமன்றத்தில், மாநிலங்கள் அவையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்து வைத்தார்.

எனவே, அந்த வழி நின்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம் நெருக்கடி கால பிரகடனத்தை, எதேச்சாதிகார கருத்தை,