உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

369

அவசர காலத்தின் அடிப்படையிலே போடப்பட்ட சட்டங்களை எதிர்த்தது. அப்படி எதிர்த்த நேரத்தில் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கிற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தார், இந்திரா காந்தியினால் போடப்பட்ட நெருக்கடி கால சட்டங்களை, நெருக்கடி நிலையை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தனர் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

,

அதைப்போலவே, 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநில சுயாட்சி தத்துவங்களை ஆதரித்தும் மாநிலங்கள் சுயாட்சித் தன்மையோடு முழுமையாகச் சுயாட்சி பெற்று விளங்கவும், மத்தியிலே ஒரு கூட்டாட்சி என்கின்ற கருத்தை எடுத்துச்சொன்னதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த நேரத்திலேதான். இங்கே அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்துவைத்து, அதைக் கொண்டு வந்தபோது, இதை எதிர்த்து வாக்களித்ததும் இன்றைக்கு உள்ள ஆளும் கட்சியாகும்.

எனவே, இப்படி சில பல கொள்கைகளால் ஆளும் கட்சியாக இருக்கின்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்று சேருவதற்கு உரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும்கூட ஒரு அரசுக்கு, அதிலும் புதிதாகத் தோன்றியுள்ள ஒரு அரசுக்கு ஆக்க பூர்வமான ஒத்துழைப்பைத் தருவது எதிர்க்கட்சிக்குத் தலையாய ஒரு கடமை என்ற அளவிலேதான், நடந்து முடிந்த சட்டமன்றத் கூட்டத் தொடரில் எங்கள் ஒத்துழைப்பைத் தந்தோம்.

இப்படி ஒத்துழைப்புத் தந்ததற்குக் காரணம், அரசு சுமுகமாக நடைபெற வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை எளிதான தன்மையிலே பெறவேண்டும் என்பதற்காகத் தந்தோம். ஆனால் எங்களுடைய நல்லெண்ணத்தை எங்கள் பலகீனம் என்று ஒருவேளை ஆளும் கட்சி கருதிக் கொண்டதோ, என்னவோ தெரியவில்லை. அதற்கேற்ப அது நடந்து கொண்டது என்பதை எடுத்துக்காட்ட நான் இங்கே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

13-க.ச.உ.(அ.தீ.) பா-2