உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வாணர் நினைவு நாள் விழாவில் தேவையில்லாமல், தொடர்பு இல்லாமல் இத்தகைய ஒரு பேச்சை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அங்கே எடுத்துக் கூறுகிறார்கள். "காலையில் 30 ரூபாய்க்கு ஒத்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் போன் மூலமாகக் கேட்கிறார்" என்று எடுத்துச்சொல்வது எந்த வகையில் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க பயன்படும் என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதோடு மாத்திரமல்ல; அதே விழாவில் பேசிய நம் முடைய முதலமைச்சர் அவர்கள் சட்டசபையில் பல் பசைக்கு வரி போடலாமா என்று நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாகவும் சில நண்பர்கள் எடுத்துக் கூறியதும், திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் எடுத்துக் கூறியதும், ஜனதா கட்சியினர் எடுத்துக் கூறியதும் பற்றிக் கலைவாணர் விழாவில் நம்முடைய முதலமைச்சர் குறிப்பிட்டு “பல் பசைக்கு வரி போட்டோம், போடலாமா என்று கேட்கிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கை கெட்டுவிடும் என்று கூறினார்கள். பல் சுத்தமாக இல்லாவிட்டால் நோய் வரும் என்று சொல்கிறார்கள். பல் விளக்க வேண்டாம் என்றா நாங்கள் சொல்லுகிறோம்? ஆலங்குச்சி, வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கக் கூடாதா? பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறையிருப்பதால் கை வைக்காதீர்கள் என்று எங்கள் கட்சிக்காரர்களிடம் சொல்லியிருக்கிறோம். அவர்கள் கை வைத்தால் பல் அல்லவா போய்விடும்' என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். இது 31-8-1977 தினமணி பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

"எங்கள் கழகத் தோழர்கள் கை வைத்தால் பல் அல்லவா போய்விடும்” என்று பற்பசைக்கு வரிபோடலாமா என்று சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டதற்கு கலைவாணர் நினைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர், அதுவும் இப்படிபட்ட பதிலைச் சொல்ல வேண்டுமா என்பதைத் தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதைப்போலவே பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தைச் சுமூகமாகத் தீர்க்க முன்வந்த என்னை, என் பெயரைக் குறிப்பிட