கலைஞரின் சட்டமன்ற உரைகள்
373
வில்லை என்றாலும்கூட நான் போக்குவரத்துத் துறை அமைச்சரோடு தொலைபேசி மூலம் பேசினேன். “30 ரூபாய்க்கு ஒத்துக் கொள்ளுகிறார்கள்” என்று பேசும் இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க நல்லெண்ணத்தோடு ஈடுபடுகிறவர்களை எப்படி ஊக்குவித்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்திட வேண்டும்.
அனைத்துத் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளின்படி தான் அனைத்துக் கட்சியினரும் சென்னையிலே காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சி அலுவலகத்தில் கூடினோம். அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க கூடினோம். அங்கே எடுத்த முடிவின்படி 4-ஆம் தேதி அன்று கண்டனக் கூட்டங்கள் தமிழகம் எங்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது
அந்தக் கண்டனக் கூட்டத்தில்கூட இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தமிழ்நாடு தலைவர் அருமைத் தோழர் கல்யாண சுந்தரம் அவர்கள் பேசும்போது “பல்லவன் போக்குவரத்து தொழிலாளர்கள் அரசியல் கட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களே ஒழிய, நாங்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்களை அழைத்து 1-ம் தேதி பேச வைக்காமல் இருந்திருந்தால் - அன்று மாலை பவானியில் அவசர அவசரமாக 27 ரூபாய் தருகிறேன் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பாரா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். யார் அரசியல் கட்சியைப் பயன்படுத்திக் கொண்டது? ? தொழிலாள வர்க்கத்தைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திக் கொண்டோமா? நீங்களே புரிந்து கொள்ளுங்கள். தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டிருந்தால் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அந்த அரசைப் பணிய வைக்க முடியும்” என்று தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் எடுத்துச் சொன்னார்கள்.
நான் 30 ரூபாய் என்று சொன்ன நேரத்தில் அவர்களை அழைத்துப் பேசி 27 ரூபாய்க்கு ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார்களேயானால் விஷயம் முடிந்திருக்கும். அவ்விதம் செய்யாமல் எந்தவிதமான தேவையும் இல்லாமல்