374
தொடர்பில்லாத ஒரு
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
விழாவில்
இதைப்பற்றிபேசி
தலைவர்களையும்
பிரச்சினையை வளர்த்து இருக்கிறார்கள்.
அவர்கள் அனைத்துக்கட்சித் அழைத்துப்பேசி ஒரு முடிவு எடுத்த பிறகு திடீரென்று முதலமைச்சர் 27 ரூபாய் கொடுக்கலாம் என்று வெளியிலிருந்து கொண்டு ஓர் அறிக்கை கொடுக்கிறார். எந்தக் கிளர்ச்சியாக இருந்தாலும் யார் காரணம் என்பதை சில நேரங்களில் சட்ட சபையில் சொல்லுகிறார்கள். வெளிப்படையாக சொல்லுவ தில்லை. மாணவர்கள் கிளர்ச்சியானாலும், விவசாயி களுடைய கிளர்ச்சியானாலும், தொழிலாளர்களுடைய கிளர்ச்சி யானாலும், நெசவாளர்களுடைய கிளர்ச்சியானாலும், மீனவர்களுடைய கிளர்ச்சியானாலும், இப்படி எந்தக் கிளர்ச்சி யானாலும் எதிர்க்கட்சிகளுடைய உதவியை கிளர்ச்சிகளிலோ அல்லது வேலை நிறுத்தத்திலோ ஈடுபடுபவர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக எதிர்க்கட்சிகளுடைய உதவியை நாடுவது இயல்பு
ய
இந்த இயல்பான காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் முதலமைச்சர் அவர்களும் மற்ற அமைச்சர்களும் தவறாக புரிந்து கொண்டு எல்லாவற்றையும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் இவைகளை எல்லாம் தூண்டிவிட்டது என்ற தவறான குற்றச்சாட்டை எடுத்துச் சொன்னார்கள். ஒரு எதிர்க்கட்சி எப்படி இருக்கவேண்டும். எப்படி நடத்தப்படவேண்டும் என்பதை பற்றி 'கேபினட் கவர்ன்மெண்ட்' என்ற ஆங்கில நூலில் ஐவார் ஜென்னிங்ஸ் அவர்கள் அருமையான கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். .....
"The opposition is at once the alternative to the Gov- ernment and a focus for the discontent of the people. Its func- tion is almost as important as that of the Government. If there be no opposition, there is no democracy. "Her Majesty's oppo- sition" is no idle phrase Her Majesty needs an opposition as well as a Government.