380
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அடுத்தபடியாக, இன்னொன்று. அடிபட்டுக் கிடக்கின்ற மாணவர்களைச் சந்திப்பதற்காக நான் செல்கிறேன். அப்படிச் செல்லும் நேரத்தில் மருத்துவமனையில் இருக்கின்ற ஒரு டாக்டர், 'டீன்' என்று கருதுகின்றேன். முகம்மது கவுஸ் என்பார் என்னை வரவேற்கிறார். ஏதோ முன்னாள் முதலமைச்சர் என்ற பாவத்திற்காகவோ அல்லது இன்னமும் பிரதான எதிர்க்கட்சி யினுடைய தலைவராக இருக்கிறானே என்பதற்காகவோ முகம்மது கவுஸ் என்ற டாக்டர் என்னை வரவேற்கிறார். அப்படி வரவேற்ற குற்றத்திற்காகவோ என்னவோ அடுத்த சில நாட்களுக்குள் 100 ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டோ, கைது செய்யப்படாமலோ வழக்கு தொடரப்படுகிறது.
அவர் இலஞ்சம் பெற்றாரா இல்லையா என்ற அந்த வழக்கில் நுழைய நான் விரும்பவில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சரவர்கள் ஒரு பொதுக்கூட்டத்திலோ அல்லது வேறு ஒரு சிறப்புக் நிகழ்ச்சியிலோ பேசும்பொழுது குறிப்பிடுகிறார் மாணவர்கள் எத்தனை பேர் அடிபட்டார்கள் என்ற கணக்கை அந்த டாக்டரிடம்-கவுஸிடத்தில் கேட்டேன், முதல் நாள் ஒரு கணக்கைச் சொன்னார். மறுநாள் ஒரு கணக்கைச் சொன்னார், இப்பொழுது அவர் மாட்டிக்கொண்டார் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றால் அது நீதிமன்றத்தில் தலையிடுவது ஆகாதா என்பதுதான். .
திரு. ரா. மார்க்கபந்து : தலைவரவர்களே, ஒரு பாயின்ட் ஆப் ஆர்டர். இந்த வழக்கு இப்பொழுது நீதி மன்றத்திலே இருக்கின்ற காரணத்தாலே.
It is affected by sub Judice so, it cannot be raked up.
கலைஞர் மு. கருணாநிதி : நான் சொன்னதை அவர் கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் இலஞ்சம் வாங்கினாரா அல்லவா என்ற அந்தப் பிரச்சினைக்குச் செல்லவில்லை என்று கூறிவிட்டேன், ஆனால் ..
மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட் : தலைவர வர்களே எதிர்க்கட்சித் தலைவரவர்கள் முதலில் ஒரு டாக்டரைப்