உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

381

பற்றி சொன்னார்கள். 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு போடப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அதன்மீது நம்முடைய உழைப்பாளர் கட்சியின் தலைவர் ஒரு பிரச்சினையை கொண்டுவந்தார்கள். நீதிமன்றத்திலே அந்த வழக்கு இருப்பதால் சப் ஜுடீஸ் ஆகாதா என்று கேட்கிறார்கள். என்னுடைய கருத்தெல்லாம், அப்படி ஒரு வழக்கு போடப் பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரவர்கள் சொல்லியிருப்பார்களேயானால் எந்தவிதமான தவறும் இல்லை. (குறுக்கீடு) நான் விளக்கத்தைச் சொல்லிவிடுகிறேன். ஆனால், இதற்கு முன் ஒரு காரணத்தைச் சொல்கிறார். என்னை, முன்னாள் முதலமைச்சராக இருந்த காரணத்தினாலோ அல்லது இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற காரணத்தி னாலோ அவர் என்னை சந்தித்தார், அப்படிச் சந்தித்த சில நாட்களுக்குள்ளாக அவர் மீது லஞ்சக் குற்றச்சாட்டு சாட்டபட்டு வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று ஒரு மோட்டிவ் கற்பிக்கும் விதத்தில், குற்றச்சாட்டு கற்பிப்பதுதான் தேவையில்லை என்று உறுப்பினரவர்கள் சொல்கிறார்கள்.

கலைஞர் மு. கருணாநிதி : தலைவர வர்களே, இதற்கெல்லாம் முதலமைச்சரவர்கள் பதில் அளிக்கின்ற நேரத்தில், பதில் அளிப்பார் என நான் நம்புகிறேன். நான் கூறுவதெல்லாம் இப்படி ஒரு வழக்கு போடப்பட்டு பிறகு முதலமைச்சர், பேசுகின்ற ஒரு கூட்டத்தில், இந்த டாக்டர் மாணவர்கள் தாக்கப்பட்டத்தைக் குறித்து எனக்குத் தவறான விவரங்களைத் தந்துகொண்டிருந்தார் என்று கூறிவிட்டு, அவர் இப்பொழுது மாட்டிக்கொண்டார் என்று, முதலமைச்சர் சொல்லிவிட்ட காரணத்தினால், எங்கே அது ஒருவேளை நீதியிலே தலையிடுவதாக ஆகிவிடுமோ, நீதிபதி அவர்களை இப்படிப்பட்ட நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தோடுதான் இதைச் சொல்கிறேனேயல்லாமல், வேறு அல்ல. நான் வழக்கினுடைய உள் விவகாரங்களுக்குச் செல்ல விரும்பவும் இல்லை, சொல்லவும் இல்லை.

அடுத்த பிரச்சினை, இன்று தமிழ்நாடு கடலோரங்களில் குமுறிக் கொண்டிருக்கிற மீனவர்களுடைய பிரச்சினை. இந்த