உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மீனவர்களுடைய பிரச்சினைகள்பற்றி நேற்று கூட இங்கே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதிலே, விசைப் படகுகாரர்களையும் கட்டுமரப் படகுகாரர்களையும் சமமாக நடத்த வேண்டுமென்ற எண்ணம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. நான் சொல்வது, விசைப்படகுக்காரர்களையும் சாதாரணக் கட்டுமரப்படகுக்காரர்களையும் எவ்வாறு சமமாக நடத்த முடியும், நிச்சயமாக முடியாது. ஏனென்றால், பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விசைப்படகுகளை ஓட்டி, அதில் சம்பாதிக்கிறவர்கள் விசைப்படகுக்காரார்கள், கட்டுமரக்காரர்கள் எந்த நேரத்திலும் கவிழக்கூடும் என்ற சூழ்நிலையோடு, அவர்களும் கடலுக்குள்ளே சென்று, சிறு வருவாயை மீன்களைப் பிடிப்பதன் மூலம் பெறக்கூடியவர்கள்.

லாபம்

ஆனால், எழுந்துள்ள பிரச்சினை அதுவல்ல. இருவரும் சமமானவர்களா, அல்லவா என்பதல்ல. ஆனால், ஏற்பட்டிருகிற அமளிக்கு, உயிர்களைக் காப்பதற்கும், உடமைகளைப் பாதுகாக்கவும், அது விசைப்படகு எரிக்கப்பட்டாலும், அல்லது கட்டுமரம் நொறுக்கப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு நீண்ட நாட்களாக ஒரு தீர்வு காணமுடியாமல் இந்த அரசு இருந்து வருகிறது. அரசிலே உள்ள சிலபேர் ஓரிடத்திலே விசைப் படகுக்காரர்களையும் இன்னொரு இடத்திலே கட்டுமரக்காரர் களையும் ஆதரிப்பதானது இன்று நேற்றல்ல, நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலேயிருந்தபொழுது கூட இருந்தது.

நாங்கள் ஆட்சியிலிருந்தபொழுது, நெல்லை மாவட்ட விசைப்படகுக்காரர்களை ஆதரித்து, இன்றைக்குள்ள அமைச்ச ரவையிலே உள்ள ஒருவர், என்னிடத்திலே வாதாடியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. கட்டுமரப் படகுக்காரர்களை ஆதரித்து, இன்றைய தினகரன் பத்திரிகை ஆசிரியரும், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினருமான, கந்தசாமி அவர்கள் கட்டுமரக்காரர்களுக்காக வாதாடியதாகவும் எனக்கு நினைவு இருக்கிறது. நான் பெயரையே சொல்கிறேன். நமது உணவு அமைச்சர் எட்மண்ட் அவர்கள் விசைப்படகுக் காரர்களுக்காக பேசியதும் எனக்கு நினைவு வருகிறது. இருவர் வாதாடியதும், பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்கத்தான் என்பதை...