கலைஞரின் சட்டமன்ற உரைகள்
385
அழிந்து, விலைவாசிகள் உச்சிக்குச் சென்று இருக்கும் இந்த நேரத்தில் திறக்கப்படாத நியாயவிலைக் கடைகள், தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்போல், பசிக்கு உதவாத உணவுபோல், பிறகு எப்போது திறக்கப்பட்டால் என்ன? மக்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற இந்த நேரத்தில் திறக்கப்பட இருக்கிற 16,000 கடைகளில் ஒரு 10,000 கடைகள் திறந்தோம், ஒரு 5,000 கடைகள் திறந்தோம் என்று சொல்வதற்கு பதிலாக ஒரு 442 கடைகள் திறந்து இருக்கிறோம் என்று சொல்வது, 16,000 எங்கே, இந்த 442 எங்கே என்ற இந்தக் கேள்விக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆகவே, சொன்ன சொல்லைக் காப்பாற்ற இன்றைக்குத் தவறிவிட்ட இந்த அரசின் மீது இதை மற்றொரு குற்றச்சாட்டாக எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.
இன்னொன்று, நிதிநிலை அறிக்கையில் மிக அழகாக நிதி அமைச்சர் படித்துக் காட்டினார். கிராமப்புறங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு. யார் யாருக்கு? செருப்பு தைப்போர், தையல் கலையில் ஈடுபட்டுள்ளோர், சலலைத் தொழில் புரிவோர், கருமார், தச்சர், நீர் குழாய் பணியாளர்கள், இதுபோன்ற லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறோம்.
அது மாத்திரமல்ல, அடுத்து வரும் 12 மாதங்களில் குறைந்தது லட்சம் பேருக்கு - குறைந்தது லட்சம் பேருக்கு என்றால் லட்சம் பேருக்கு மேலும் எதிர்பார்க்கலாம். குறைந்தது என்றால் மினிமம் லட்சம் பேருக்கு என்று நிதியமைச்சர் அறிவித்தார்கள். 12 மாதங்களுக்குள் என்று அறிவித்து 6 மாதம் ஓடிவிட்டது. இந்த 6 மாத காலத்தில் அந்த லட்சம் பேருக்கு கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அளிப்பதாகச் சொன்னீர்களே, அவர்களுக்கு எத்தனை ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று இதையும் சுட்டிக்காட்டி, சொன்னபடி நடக்கவில்லை என்ற தவறை இங்கே எடுத்துக் காட்டி இந்த அரசின் மீது மற்றொரு குற்றச்சாட்டைச் சாட்ட நான் கடமைப்பட்டு இருக்கிறேன். முதலமைச்சர்