உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

389

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே விவசாயிகளிடத்தி லிருந்து வியாபாரிகள்தான் வாங்குகிறார்கள். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்காத காரணத்தால் 89 ரூபாய் அல்லது 90 ரூபாய் என்று ஒரு விலையை நிர்ணயித்த நெல்லை வாங்காத காரணத்தால் விவசாயிகளை வியாபாரிகள் ஏமாற்ற முடிகிறது. வியாபாரி குறைந்த விலைக்குக் கேட்டால் உங்களிடத்திலே போடமாட்டேன், அரசு கொள்முதல் நிலையத்திலே போடுகிறேன் என்று மிரட்டுகிற நிலைமை இருந்தால்தான் அவன் பாதுகாக்கப்படுவான்.

இதை எடுத்துச்சொன்னால் உடனே உணவு அமைச்சர், கருணாநிதி, விவசாயப் பேரணியை நடத்துகிறார், விவசாயப் பேரணியை நடத்த கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார். நான் தகுதியற்றவனாக இருக்கலாம் அதை எட்மண்ட் போன்றவர்கள் எடுத்துக்காட்டியதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற அந்த வள்ளுவர் வாக்குப்படியும் தகுதியற்ற கருணாநிதி இந்த விஷயத்தைச் சொல்கிற நேரத்தில், சொல்லப்பட்ட விஷயம் சரியானாதுதானா என்பதை எண்ணிப்பார்த்து விவசாயிகள் பிரச்சினை கவனிக்கப்படும் என்று சொல்லி யிருந்தால் அந்த அளவுக்குக்கூட இந்த விவகாரம் முற்றி யிருக்காது.

பிறகு, பேரணியை நடத்திய பிறகு, முதலமைச்சர் அவர்கள் அழைத்துப் பேசிய பிறகு, மறுபடியும் இந்த அறப் பேராட்ட ஆய்வுக் குழு முதலமைச்சரைச் சந்தித்த பிறகும், இன்னும் எந்த விதமான, விவசாயிகளுக்குச் சாதகமான ம் அறிக்கை வெளிவரவில்லை. அது வெளிவரவேண்டும் என்பதற்காகத்தான், முதலமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்கின்ற இந்தக் குற்றச்சாட்டினை நான் இங்கே கூற விரும்புகிறேன்.

நெல் விலையை அதிகப்படுத்திக் கொடுத்தால் அரிசி விலை அதிகமாகி விடாதா என்று கேட்பவர்கள், இப்போது நெல்விலை குறைந்திருக்கிற நேரத்தில், 89 ரூபாய் இருக்கின்ற