உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வேண்டுமென்று சொன்ன போதுகூட அவர்களுக்கு போனஸ் என்று 10 ரூபாயும், போக்குவரத்துச் செலவு என்று 5 ரூபாயும் ஆக மொத்தம் 15 ரூபாயை அதிகம் கொடுத்து ஆக மொத்தம் 89 ரூபாயை அவர்கள் பெற்றார்கள், இந்த அரசு அந்த முறையை கடைப்பிடிக்குமா என்று கேட்டேன். நான் கேட்டதும் முதலமைச்சர் அளித்த பதிலும் 10-8-77 ஹிந்து பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Intervening, the Leader of the Opposition Mr. Karunanidhi recalled that the D.M.K. Government gave as bonus and transport charges Rs. 15 more than the procure- ment price fixed by the Centre. He wanted to know whether the preset Government would revive it. The Chief Minister Mr. M.G. Ramachandran said the Government will do whatever was in the best interest of the ryots.

MR. KARUNANIDHI: I have asked a specific question. Will the Government pay anything extra as bonus, transport charges etc., be it Rs. 20 or less?

CHIEF MINISTER: The ryots will get more than what Mr. Karunanidhi expects.

கலைஞர் மு. கருணாநிதி : எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதி எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே அந்த உற்பத்தி செய்கின்ற விவாசயிகளுக்கு தரப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் அவர்கள் இந்த மாமன்றத்தில் அளித்ததும், அது எல்லா பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. நான் அதை இங்கே படித்துக் காட்டினேன். இதுவரையில் அதற்கான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட வில்லை. கேட்டால் உணவு அமைச்சர், நாங்கள் கொள்முதல் செய்வதே கிடையாது. கொள்முதல் செய்தால் அல்லவா அதிக விலை கொடுக்க முடியும் என்கிறார். அடிப்படையே நீங்கள் கொள்முதல் செய்யவேண்டும் என்பதுதான். அதற்கு எடுத்து வைக்கப்படுகிற வாதம் இப்பொழுது ஒரே உணவு மண்டலமாக ஆகிவிட்டது. மற்ற மாநிலங்களுக்குச் சென்று விற்றுக் கொள்ளலாம் என்ற வாதம் எடுத்து வைக்கப்படுகிறது.

28-க.ஆ.உ.(அதீ.ச.)