உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

387

அவர்கள் இதே மன்றத்தில் எடுத்துச்சொன்னார்கள். மாறி மாறி பலரும் இங்கே கேள்வி கேட்ட நேரத்திலே அரசு எடுத்து நடத்துமா என்று கேட்டபோது அமைச்சர் ராகவானந்தம் விளக்கமாகச் சொன்னார்கள். அரசே மூடப்பட்ட தொழிற் சாலையை எடுத்து நடத்த நிதி ஒதுக்குவது சாத்திய மற்றதாக இருக்கிறது என்றும் அப்படி மூடப்பட்ட ஆலைகளைத் தொழிலாளர்களே எடுத்து நடத்துவது பற்றி முதல்வர் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்த மன்றத்தில் சொன்னார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? காற்றிலே கலந்த கீதம் ஆகிவிட்டதா?

அரசே எடுத்து நடத்துமா என்ற கேள்வி எந்த அடிப்படையிலே எழுந்தது? ஏற்கெனவே இருந்த கழக அரசு 13-க்கும் மேற்பட்ட ஆலைகளை எடுத்து நடத்தியது. அந்த அடிப்படையிலேதான் இங்கே கேள்வி கேட்கப்பட்டது. எதிர்க் கட்சித் தலைவர்களின் சார்பாக உறுப்பினர்கள் கேட்டார்கள். அப்பொழுது அளித்த பதில் அரசே எடுத்து நடத்த நிதி ஆதாரம் இல்லை. எனவே, தொழிலாளர்களே அந்த மில்களை எடுத்து நடத்துவதற்கு எப்படிச் செயல்படுவது என்பதைக்குறித்து முதல்வர் ஆலோசித்து வருகிறார் என்று சொல்லப்பட்டது

கிட்டத்தட்ட 4, 5 மாத காலமாக இந்தப் பிரச்சினை ஆலோசனையில் இருந்து வருகிறது. சில நேரங்களில் ஆலோசனைகள் ஊறுகாய் பானைக்குள் போய்விடும். அதை வெளியே எடுத்து இலையில் பரிமாறப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலமாக நான் இந்தக் குற்றச்சாட்டை இந்த அரசின் மீது சுமத்த விரும்புகிறேன் என்பதைக் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த மன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் முதலமைச்சர் அவர்களிடத்திலே கேட்டேன். ஏற்கனவே இருந்த அரசு விவசாயிகளுக்கு அவர்களுக்கு கட்டுப்படி ஆகின்ற விலை கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு சில நல்ல காரிங்களைச் செய்தது. மத்திய அரசு 74 ரூபாய்தான் கொடுக்க