உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

391

காற்றில் போய்விடுகின்றன என்கின்ற குற்றச்சாட்டை நான் மீண்டும் எடுத்துவைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்

எனவே, மக்கள் நடத்திச் செல்கின்ற பணியைச் செய்கின்ற அரசு நிர்வாக நடைமுறைப் பணிகளையும் இந்த 6 மாதகாலத்தில் சரியாகச் செய்யவில்லை என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

காரணம் சொல்லலாம். புயல் வந்துவிட்டது, வெள்ளம் வந்துவிட்டது என்று. புயல் வந்தது நவம்பர் மாதத்தில்! அந்தப் பணிகளாவது ஒழுங்காக நடைபெற்றனவா என்பதைப்பற்றி நம்முடைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் 2, 3 நாட்கள் கடுமையான விவாதம் நடைபெற்றிருக்கிறது. அரசைப் பாராட்டிப் பேச ஆரம்பித்தவர்கள்கூட பல இடங்களில் ஏற்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி, நாமினேஷன் ஏற்பாட்டில் ஊழல் புகார்கள், கான்டிராக்ட் விடப்பட்டதில் இருக்கிற ஊழல் புகார்கள், வேண்டியவர்களுக்கு காண்டிராக்ட்கள் அல்லது நாமினேஷன் தரப்பட்டிருக்கிறது என்ற ஊழல் புகார்கள், அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள். இவைகள் எல்லாம் இந்த மன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இவ்வளவு கடுமையான புகார்கள் வந்த நேரத்திலும்கூட, நமது முதலமைச்சரின் கவனம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதுதான் இருந்தது. புயல் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவா என்றால் இல்லை.

இந்த நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது என்ன குற்றத்தைச் சாட்டலாம் என்பதிலேதான் முதலமைச்சர் தன்னுடைய முழு நேரத்தையும் செலவழித்தார். டெல்லி சென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஒத்துழைக்கவில்லை என்றார். பிறகு, இங்கே வந்த பிறகு சில நாட்களுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஒத்துழைக்கிறது என்று ஒப்புக் கொண்டார். அதற்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கூட்டுக் குழுக்களிலும், நிவாரணக் குழுக்களிலும் அவர்களை நியமிக்கக்