உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கூடாது என்று அறிவித்தார் முதலமைச்சர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு அறிக்கை விட்டது. அதைக் கண்டித்து இது நல்ல மரபாகாது என்று அறிக்கை விட்டது. அதற்காக அந்தக் கட்சிக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். சில நேரங்களில் அந்தக் கட்சி இப்படிப்பட்ட ஜனநாயக நிலைகளை எடுத்துக்காட்ட முற்பட்டுள்ளது. அந்த கட்சியின் அறிக்கைக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் சேர்த்துக் கொள்ளப்படும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒத்துழைக்கிறது என்று முதல்வர் சொன்னார்.

இது கட்சிக் கொள்கையின் முடிவா அல்லது பிரதமரோ, அல்லது வேறு மத்திய அமைச்சர்களோ பதில் கொடுத்ததற்குப் பிறகு அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதா என்று அந்த மர்மத்திற்குள்ளே நுழைய நான் விரும்பவில்லை. எப்படியோ முதலில் கலந்துகொள்ளவில்லை என்று சொன்ன முதலமைச்சர், மறுபடியும் கலந்து கொண்டதாகச் சொன்னார். நேற்று அதைப் பற்றி கட்சி உறுப்பினர் ரகுமான்கான் கேட்டபோது முதலமைச்சர் முதலில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை அது உண்மை. பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டார் - எல்லோரும் கலந்து கொள்ளலாம் என்று அதற்குப் பிறகு கலந்து கொண்டார்கள் - ஆகவே நான் அதை ஏற்றுக் கொண்டேன் என்ற விளக்கத்தை தந்தார்கள்.

-

அந்த விளக்கம், அடிப்படையிலேயே ஆதாரமற்றது என்பதை நான் மிகுந்த வருத்தத்தோடு இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், புயல் செய்தி வந்த மறுநாளே 25 ஆயிரம் ரூபாய் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அது பெரிய பணமல்ல - கோடி நாங்கள் சேர்த்திருக்கிறோம். இது என்ன பெரிய 25 ஆயிரம், தூசு என்று கருதக்கூடும். பெரிய பணம் அல்ல. ஆனால், கொடுமையால் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த 25 ஆயிரம் ஓரளவுக்காவது பயன்படும் என்ற அளவில்தர முற்பட்டோம். நேற்யை தினம் பேராசிரியர் பேசும்போது குறிப்பிட்டதைப் போல திருச்சியை சேர்ந்த பரமதயாளன் என்ற கழகத் தோழன் வெள்ளத்தில் தத்ததளித்து கொண்டிருக்கும் 10 பேரைக் காப்பாற்றிவிட்டு இறுதியில் அப்பணியை மேற்கொண்டிருக்கும் போது மாண்டு போனார்.