உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சொல்கிறேன் என்று அறிக்கை விடுகிறார். அது 'இந்து' பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி வருகிறது

ஆனால், 10, 15 நாட்களுக்குப் பிறகு என்ன சொல்லுகிறார் முதலமைச்சர்? 'மதுரை, திருச்சி, காஞ்சி, சென்னை ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி நீதி விசாரணை இல்லை. நீதி விசாரணை, துப்பாக்கியால் சுட்டது சரிதானா என்ற ஒரே விஷயத்திற்காக மட்டும்தான் நீதி விசாரணை' என்று தெரிவித்தார். இந்த முரண்பாடான பேச்சை எப்படிக் கண்டிக்காமல் இருக்க முடியும்? இந்த முரண்பாட்டை எப்படி குற்றம் என்று சொல்லாமல் இருக்க முடியும்? இந்த முரண்பாட்டை எப்படி தவறு என்று சுட்டிகாட்டாமல் இருக்க முடியும்?

.

இந்திரா காந்தி வருகிறார்; விமான நிலையத்தில் இறங்கு கிறார். முதலமைச்சர் சென்று அவரைச் சந்திக்கிறார். அங்கே இருவரும் பேசுகிறார்கள். நிருபர்கள் கேட்கிறார்கள். "வெறும் மரியாதை சந்திப்பு என்கிறார், கறுப்புக் கொடி பற்றி பேசினீர்களா" என்று கேட்கிறார்கள். 'அதைப்பற்றி அந்த அம்மையார் கவலைப்படுவதாகத் தெரியவில்லை' என்கிறார்.

அதற்குப் பிறகு டில்லிக்குச் செல்கிறார். அங்கே டில்லியில் உள்ளவர்கள் கேட்கிறார்கள். அங்கே சொல்கிறார், “நான் இந்திரா காந்தியைச் சந்தித்து, அந்த அம்மையார் வெள்ளப் பகுதிகளுக்குச் செல்லலாமா என்று கேட்டார்கள்; பலஹீனமான (டௌன்-ட்ராடன்-பீபிள்) மக்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லலமா என்று கேட்டார்கள். அங்கே யெல்லாம் செல்லவேண்டாம் என்று அவருக்கு அறிவுரை சொல்வதற்காகச் சென்றேன் என்று கூறுகிறார். சென்னையிலே ஒரு பேச்சு, டில்லியிலே ஒரு பேச்சு?

ஏன்

‘மக்கள் குரல்’ பத்திரிக்கையில் வருகிறது; 'இந்திரா காந்தி அம்மையார் மதுரையிலிருந்து முதலமைச்சருக்கு டெலிபோன் செய்தார்கள்' என்று வருகிறது. அது மறுக்கப்படவில்லை, பிறகு- அதற்கு நீண்ட நாளைக்குப் பிறகு அது மறுக்கப்படுகிறது. ராஜ்நாராயன் அதைப்பற்றி அறிக்கை விட்ட பிறகு, ஜார்ஜ்