உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

399

பெர்னாண்டஸ் அதைப்பற்றி கண்டித்த பிறகு 'இந்திரா காந்தி சொல்லித்தான் தடை உத்தரவு போடப்பட்டது என்று சொன்னபிறகு மறுக்கிறார். 'மக்கள் குரல்' வந்த மறுநாளே ஏன் மறுக்கக்கூடாது? 'மக்கள் குரல்' உங்களுக்குத் தொடர்பில்லாத பத்திரிக்கையா? உங்களுக்கும் அதற்கும் நெடுந்தொலைவா? உங்கள் திருத்தத்தை வெளியிட்டிருக்க மாட்டார்களா? ஏன் மறுநாள் திருத்தம் வரவில்லை?

தொலைபேசியில் பேசினார்கள் என்ற செய்தி டில்லிக்குப் போன பிறகு மறுப்பு. 10 நாள் கழித்து இங்கே மறுப்பு. எனவே, இந்திரா காந்தி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தீர்த்துக் கட்ட, இந்த நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொன்னார். அறிவுரை கூறினார்.

அடுத்து என்ன நடைபெற்றது? 30-ம் தேதி 'மினிமிசா' பயன்படுத்தப்பட்டது. நாங்கள் 'மிசா' சட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது ஜனதா அரசு கொண்டு வருகின்ற - தடுப்புக் காவல் சட்டம் - அதையும் நாங்கள் தாட்சணியம் இல்லாமல் எதிர்ப் பவர்கள், தடுப்புக் காவல் சட்டத்தின் பெயரால் 'மிசா' என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள். இங்கே 'மினி-மிசா' என்ற அளவில் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் எங்களுடைய மிக முக்கியமான குற்றச்சாட்டாகும்.

அதற்கு பிறகு நாங்கள் ரிமாண்டிலே வைக்கப் படுகிறோம். ரிமாண்டில் வைக்கப்பட்ட நாங்கள், 'ஜாமீனில் வெளி வரலாம்; ஜாமீனில் வெளிவரலாம்', என்ற இந்த ஒரே வார்த்தையை முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் செல்கிற இடங்களில் எல்லாம் சொன்னார்கள். வேறு சில தோழமைக் கட்சிக்காரர்களும், 'ஜாமீனில் வெளி வரலாம்; ஜாமீனில் வெளிவரலாம்' என்று சொன்னார்கள்.

முதல்நாள் இவர்கள் பயங்கரக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி யிருக்கிறார்கள். இவர்கள் வெளியே இருப்பது ஆபத்து; ஆகவே, நீதிபதி அவர்களே, இவர்களுடைய ரிமாண்டை நீடிக்க வேண்டும்” என்று அரசுத் தரப்பு வக்கீல் வாதம். இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரிமாண்ட் நீடிக்கப்படுகிறது. மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு, நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து