400
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
வரப்படுகிறோம். அங்கே மீண்டும் அரசுத் தரப்பு வக்கீல் வாதாடுகிறார்: "இவர்கள் மிக பயங்கரக் குற்றங்கள் செய்து, அதற்கான தடயங்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. மிக பயங்கரமான சதி நடத்துவதற்கு சில இடங்களுக்கு தந்தி கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தந்திகள் கிடைத்திருக்கின்றன. வழக்கிலே வரும், அதில் தந்தி கொடுத்தோம் என்பது ஒரு குற்றச்சாட்டு. எனவே ரிமாண்ட் நீடிக்கவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் சொல்கிறார்.
பிறகு, 9-ம் தேதி நாடெங்கும் மறியல் என்று தலைமைக் கழகம் அறிவித்து, ஆங்காங்கே தொண்டர்கள் செயல்படத் துவங்கியதும், 8-ம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறோம். அங்கே அரசாங்க வக்கீல் சொல்கிறார்: இவர்களுடைய பயங்கர சதி தமிழ்நாட்டோடு முடியவில்லை; மற்ற மாநிலங்களிலும் பரவி வேர் விட்டிருக்கிறது. ஆகவே இந்த பயங்கரவாதிகளை ரிமாண்டில் வைக்கத் தேவையில்லை" இதை விட கேலிக்கூத்து வேறு ஏதாவது இருக்க முடியுமா? அவர்கள் வாதம், “சதி மற்ற மாநிலங்களுக்கு பரவியிருக்கிறது. ஆகவே ரிமாண்ட் தேவையில்லை. ஜாமீனில் அனுப்பிவிடலாம்.
அந்த வழக்கில் எங்கள் சார்பில் ஆஜரான பாளையங் கோட்டை சண்முகம் அவர்களும், திரு. கணபதி அவர்களும் கேட்கிறார்கள், ரிமாண்ட் தேவையில்லை என்று நீங்கள் சொன்ன பிறகு ஜாமீன் என்ற பிரச்சினை எங்கே எழுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். எப்படியோ விடுவிக்கப்படுகிறோம்.
விடுவிக்கப்பட்ட பிறகு மறுநாள் நீதிபதி அவர்கள் சொல்கிறார்கள், நீங்கள் சம்மன் அனுப்பினால் வரவேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள். அதில் கையெழுத்து போட்டு நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு வரவில்லை. டயரக்ஷன் கொடுக்கிறார்கள். "நான் கண்டிஷன்" நீதிபதி டயரக்ஷன், கண்டிஷன் போடவில்லை. நாங்கள் விடுவிக்கப் படுகிறோம்.
மறுநாள் அவரச அவசரமாக முதல் அமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் செய்தி கூறுகிறார். நிருபர்களுடைய