உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கழகத்தைச் சேர்ந்தவர்கள், ராமகிருஷ்ணத் தேவர் போன்ற தேசீய வாதிகள் அரசாங்கத்தினிடத்தில் முறையிட்டார்கள். வறட்சி காலத்தில் அங்கு பாலம் கட்ட வேண்டும் என்றும், தூர் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பெரிய கண்மாய் தூர் எடுக்கப்படுகிறது. அதில் பாலம் கட்டப்படுகிறது. இதைப் பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் என்ன சொல்லுகிறார், இந்தக் கண்மாய் வேலையில் ஊழல் நடந்திருக் கிறது. இந்த ஊழலைச் செய்தவர்கள் யார் என்பதை வெளியில் சொல்லிவிடுவார் என்பதற்காக ஒருவர் கொலை செய்யப் பட்டார். மக்கள் குரல் பத்திரிகையில் இந்தச் செய்தி வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியேந்திரன் அவர்களுடைய மாமனாருக்கு காண்டிராக்ட் விடப்பட்டது என்று அமைச்சர் சொன்னதாகச் செய்திவருகிறது. இதை எதிர்த்து சத்தியேந்திரன் அமைச்சர் மீதும் பத்திரிகை மீதும் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். வழக்குப் போடுவதற்காக, வழக்குப் போடப்பட இருக்கின்ற காரணத்தினால் நான் இந்த விவரங்களுக்குள் செல்லவில்லை. இதைப்பற்றி நான் ராம கிருஷ்ணத் தேவர் அவர்களிடமும் விசாரித்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த யாரிடமும் இந்த காண்டிராக்ட் கொடுக்கப்படவில்லை என்றும் அதுவும் பாலம் கட்டுகின்ற வேலை முன்னாள் காங்கிரஸ்காரர் ஒருவருக்கு, அவர் எம்.எல்.ஏ. பதவிக்கு நின்று தோற்றுப்போனவர் - அவருக்குத் தான் பாலம் கட்ட கான்டிராக்ட் தரப்பட்டது என்றும், தூர் வாருகின்ற வேலை ஆயக்கட்டுதாரர்களே சேர்ந்து செய்தார்கள் என்றும் சொன்னார்கள். இப்படி எதைப் பார்த்தாலும் ஊழல், ஊழல் என்றே பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, எங்களைப் பார்த்து, அதாவது திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள் விளம்பரப் பிரியர்கள் என்று கூறிக்கொண்டே வருகிறார்கள். இவர்கள் விளம்பரப் பிரியர்கள், என்று எங்குப் பார்த்தாலும் பேசிக்கொண்டே யிருப்பது நாங்கள் தான் விளம்பரப் பிரியர்கள், சரி. டெல்லியில் நடைபெற்ற விழாவில் சரண்சிங் அவர்களோடு முதலமைச்சர்