உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

405

நிற்கிறார் என்றால் அதை எடுத்து இங்கு விளம்பரப்படுத்து கிறார்கள் என்றால் அது விளம்பரம் அல்லவா? உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் நான் கூறி முடித்துக்கொள்கிறேன். சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டைரியில் முதலமைச்சர் அவர்களுடைய படம் போட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. இதுவரை இப்படிப்பட்ட டைரியில் என்னுடைய படம் போட்டதாக, நினைவில்லை. அப்படியே போட்டிருக்குமானால் கூட ஒரு பக்கத்தில் போட்டிருக்கக்கூடும். ஆனால் இந்த டைரியில் ஐந்த இடத்தில் (டைரியை எடுத்துக் காண்பித்து) நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய படம் போடப் பட்டிருக்கிறது. இது விளம்பரம் அல்லவா? ஜனாதிபதியோடு கைகுலுக்குகின்ற படம், காமராஜ் அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்ட போது எடுத்த படம், அண்ணாசிலைக்கு மாலை போடுகின்ற நேரத்தில் எடுக்கப்பட்ட படம், மக்களிடையே பிரதிக்ஞை எடுத்துக்கொள்வது போன்ற படம் மூன்றாவது இடத்தில் வல்லபாய்பட்டேல் படம் திறந்து வைக்கப்பட்ட போது உள்ள படம் இப்படி ஐந்து இடங்களில் முதலமைச்சருடைய படம் தோன்றுகிறதே இது விளம்பரம் அல்லவா? ஏதோ அழகானவர்களைத்தான் இப்படி படம் போடலாம் எங்களைப் போன்ற அழகற்றவர்களின் படம் போடக்கூடாது என்று எண்ணியிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை - இப்படி ஒரு டைரியில் ஐந்து இடங்களில் நீங்கள் உங்கள் படத்தைப் போட்டு விளம்பரபடுத்தி விட்டு நீங்கள் மற்றவர்களைப் பார்த்து நீங்கள் விளம்பரப் பிரியர்கள், விளம்பரப் பிரியர்கள் என்று சொல்வதற்கு என்ன தகுதி படைத்திருக்கிறீர்கள்? இவ்விதம் உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தவிதப் பொருத்தமும் கிடையாது வெறும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டி இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து அமர்கிறேன்.