கலைஞரின் சட்டமன்ற உரைகள்
407
என்கின்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு அதற்கு பிறகு அலுவல் ஆய்வு குழுவில் அமர்ந்து ஆராய்ந்து நேரம் கணிக்கப் பட்டு விவாதம் வளர்ந்த காரணத்தினால் நேரம் கொஞ்சம் நீடிக்கப்பட்டு இந்த தீர்மானத்தின் மீது எல்லாக் கட்சியைச் சார்ந்தவர்களும், தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்
திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே ஆட்சியில் இருந்த நேரத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பலவற்றை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அன்றைக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பிரதான எதிர்க் கட்சியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து பேசுகிற நேரத்தில் மானம் மரியாதையிருந்தால் உடனடியாக இந்த அமைச்சரவை ராஜிநாமா செய்ய வேண்டும் என்கின்ற கடுமையான சொற்றொடர்களை கூறி முடித்திருக்கிறார்கள் என்பதை அவை நடவடிக்கை குறிப்பை எடுத்துப்பார்த்தால் அவைகளை நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
நான் துவக்கத்தில் எடுத்துக்காட்டியதைப் போல், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்ததையொட்டி இந்த அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று குறிப்பிடவோ அல்லது அதிகமான வாக்குகளைப் பெற்று இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தோடோ, கொண்டுவரப்பட வில்லை என்று சுட்டிக்காட்டிவிட்ட காரணத்தினால், முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது மானம் மரியாதை இருந்தால் ஒழுங்காக ராஜினாமா செய்யுங்கள் என்று சொன்னதைப் போன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்த தேவையில்லை, பயன்படுத்தவும் மாட்டோம் - பயன்படுத்த வில்லை என்பதை இந்த அவைக்கு மெத்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த மன்றத்தில் உள்ள, குறிப்பாக ஜனதா கட்சியைத் தவிர மற்றவர்கள் அனைவருமே, திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த நம்பிக்கையின்மை தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்கிற சொல்லை பயன்படுத்தி தங்களுடைய கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள். ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள்