உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் சொல்லாமல், ஆதரிக்கிறோம் என்றும் சொல்லாமல் இந்தத் தீர்மானத்தை பயன்படுத்திக் கொண்டு அரசு எவ்வகையில் தங்களுடைய பாதையை செப்பனிட்டுக் கொள்ளவேண்டும், எவ்வகையில் அந்த வழி செம்மையாக இருந்திட வேண்டும், எந்தெந்த குறைகள் களையப்படவேண்டும் என்கின்ற கருத்துக்களை எப்படி திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்டியதோ, அதைப் போலவே ஜனதாக் கட்சியை சார்ந்தவர்களும் அவர்களுடைய கொள்கைகளுக்கேற்ப தங்களுடைய கருத்துக்களை இங்கே

எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால்,

ஒன்றை நான் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த பிறகு கவனிக்கிறேன். நண்பர் ஜேம்ஸ் அவர்கள் எடுத்துக்காட்டியது போல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் தோழமைக் கட்சிகளாக ஆக முடியும் என்று எண்ணுகின்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் இன்றைக்கு இங்கே பிரதான எதிர்க் கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கொண்ட வரப்பட்டிருக்கின்ற நம்பிக்கையின்மை தீர்மானமோ என்று ஐயுறுகின்ற அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் மீது பேசியவர்கள் மிகக்கடுமையாக விமர்சித்ததை இந்த மாமன்றமும் நன்கு அறியும், நாட்டுக்கும் நன்கு தெரியும்.

ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். ஆறு மாத காலத்திற் குள்ளாக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவைதானா, அதை திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே கொண்டு வரலாமா என்கின்ற பிரச்சினையை பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பினார்கள். இதற்கு இந்த அவையில் முன் மாதிரி இருக்கிறது என்பதை இன்று காலையில் பேசிய மாண்புமிகு அமைச்சர் வீரப்பன் அவர்கள்கூட எடுத்துக் காட்டினார்கள்.

ஆனால், அதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு என்று சுட்டிக் காட்டினார். நான் அந்த விதிவிலக்கிற்குள் நுழைய விரும்பவில்லை.