உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

413

முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்படாது என்பதை இந்த மாமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திற்கு முன்னால் நின்றுகொண்டு நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மக்கள் தீர்ப்பை பிறகு மக்களேதான் திரும்பப் பெற வேண்டும். மக்கள்தான் அப்படித் திரும்பப் பெற வேண்டுமே தவிர, கிளர்ச்சிகள் மூலமாக, புரட்சிகள் மூலமாக, அமளிகள் மூலமாக, கலவரங்கள் மூலமாக, சட்டம் ஒழுங்கைக் கெடுத்து விடுவதன் மூலமாக ஒரு அரசைக் கவிழ்த்துவிட வேண்டுமென்ற மனப்பான்மை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எடுத்துச்சொல்லப்பட்ட குறைபாடுகளைப்பற்றி

கட்சியினுடைய

விமர்சிக்கிற நேரத்திலே இங்குள்ள தலைவர்கள், வேறு பல கட்சியினுடைய உறுப்பினர்கள் எல்லாம் உங்கள் ஆட்சியிலே நடைபெறவில்லையா, உங்கள் ஆட்சியிலே நடைபெற வில்லையா என்று கேட்பது இந்த ஆட்சியிலே நடைபெறுகின்ற தவறுகளுக்கு சமாதானமாக ஆகி விடாது என்பதை மாத்திரம் நான் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன். நான் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதற்குப் பதில் முன்பு இவைகளையெல்லாம் நீங்களே செய்யவில்லையா என்று விவாதிப்பதாக இருந்தால் பிறகு நீங்களே தொடர்ந்து ஆட்சியிலே இருந்திருக்கலாம் அவர்கள் ஏன் வரவேண்டும் என்றுதான் கேள்வி நடுநிலையாளர்கள் உள்ளத்திலே எழும். ஏற்கனவே இருந்த ஆட்சி தேவைதானா என்று நிச்சயமாக நடுநிலையாளர்கள் உள்ளத்தில் கேள்வி எழும்.

குறிப்பாக, இங்கே விவசாயிகள் போராட்டத்தைச் சொன்னார்கள். அதற்கு நம்முடைய முதலமைச்சர் என் சார்பிலே நல்ல பதில் அளித்து விட்டார்கள் என்று நம்புகிறேன் விவசாயிகள் போராட்டத்திலே ஒரு பைசா கட்டணத்தைக் குறை என்பதற்காக அவ்வளவும் நடைபெற்றதாக அவர்கள் சொன்னார்களேயல்லாமல் உண்மையிலே சொல்ல வேண்டு மானால் மின் கட்டணத்தை 1 பைசா ஏற்றியதற்காகத்