உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தான் அவ்வளவும் நடைபெற்றது என்றுதான் திருத்திப் படித்தாக வேண்டும். ஒரு பைசா ஏற்றியதற்காக இவ்வளவும் நடைபெற்றது. முதலமைச்சர் அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல் கோவை மாவட்டத்திலே கட்டை வண்டிகள் கொண்டு வரப்பட்டு ஏறத்தாழ மூன்று நாட்கள் கோவை நகரத்திலே வீதிகளிலே, தெருக்களிலே, நடைபெற்றது.

சந்து பொந்துகளிலே எல்லா இடங்களிலும் நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடைஞ்சலைப் பயங்கரமாக ஏற்படுத்தியபோதும் காவல் துறை பொறுமையோடு இருந்தது, என்று முதலமைச்சர் அவர்களே அதையும் எடுத்துச் சொன்னார்கள். போலீசார் ஜீப்பிலே சென்றபோது அவர்கள் கொல்லப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டபோது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டியிருந்தது என்று அன்றைக்கு நாமெல்லாம் ஒன்றாக இருந்த நேரத்திலே விளக்கி இருக்கிறோம் என்பதை முதலமைச்சர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். விவசாயிகள் போராட்டத்திலே இப்படியெல்லாம் அமளி ஏற்படவில்லையா என்று கேட்ட நண்பர்களுக்கு அது தகுந்த பதிலாக அமையும்.

கீழ்வெண்மணிச் சம்பவம்பற்றி இங்கே திரு. ரமணி அவர்கள் பேசினார்கள். முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா காலத்திலே அந்தச் சம்பவம் நடைபெற்றது என்று எடுத்துச்சொல்லி அன்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த திரு. ராமமூர்த்தி அவர்கள் அண்ணா அவர்களைச் சந்தித்து என்ன என்ன முறைகளை கீழ்வெண்மணி சம்பவத்தையொட்டி கடைப்பிடிக்கவேண்டுமென்று எடுத்துச் சொன்னார்களோ அவைகளையெல்லாம் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் எடுத்தார்கள். நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நம்முடைய நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் திரு. உமாநாத் அவர்கள் பேசியபோது சொன்னார்கள், கழக அரசு தொழிலாளர் நல விரோத அரசு ஆக இருந்தது என்று