கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ல்
439
என்னென்ன காரியங்கள் நடைபெற்றன? எத்தனை விதமான சோதனைகள் நடைபெற்றன? நான் ஆட்சி கலைக்கப்பட்ட நேரத்தில் முரசொலி அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் - அப்போது நான் அங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன் - என் எதிரில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பீரோக்கள் உடைக்கப்படுகின்றன, மேஜைகள் உடைக்கப்படுகின்றன. அங்கே இருக்கிற பூட்டுக்கள் உடைக்கப்படுகின்றன. என்னைச் சுற்றி அதிகாரிகள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை சூழ உட்காரவைத்துவிட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்படி என்னுடைய இல்லத்தில், என்னுடைய அலுவலகங்களில், கட்சிப் பணிமனைகளில், எங்களுடைய கழகத் தோழர்களின் இல்லங்களில், எங்களுக்கு எங்கேயாவது தொலைவிடத்து உறவினர்கள் இருக்கிறார்களா, தொலைதூர உறவினர்கள் இருக்கிறார்களா என்ற அந்த வகையில் எல்லாம் சோதனைகள் நடைபெற்றன.
குற்றச்சாட்டுக்களை கொடுத்துவிட்டீர்கள். கொடுக்கும் போது நீங்களேகூட இது இவ்வளவு கொடூரமாக வரும் என்று எண்ணியிருக்க மாட்டீர்கள். உங்களுடைய நல்ல உள்ளம்கூட உடைந்திருக்கும். என்னென்ன நடைபெற்றன. என் மனைவி இங்கே இருக்கிற சகோதரிகள் மன்னித்துக்கொள்ள வேண்டும்- எனக்கு நேராக முக்கால் நிர்வாணமாக்கப்பட்டு தன் உடலில் எங்கேயாவது வைரமோ தங்கமோ பதித்து வைத்திருக்கிறாளோ என்று என்னுடைய இரண்டாவது மனைவியின் வீடு சோதனை யிடப்பட்டு, அவள் சோர்ந்து களைப்படைந்து விழக்கூடிய விதத்தில், கீழே விழுந்து துடிதுடித்துப் போன காட்சியை எனது அருமை நண்பர் ப.உ.ச. அவர்கள் நேரில் பார்த்தார்கள்.
அதிகாரிகள் பல விவரங்களை விசாரிக்கிறார்கள். பலபேர்கள் சென்னையைச் சேர்ந்த அதிகாரிகள். விசாரித்து விட்டு கேட்கிறார், அரை மணி நேரத்திற்கு பிறகு கேட்கிறார், சார் உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார். அதிலும் என்னை அவமானப்படுத்த வேண்டுமாம். களங்கப்படுத்த வேண்டுமாம். இவ்வளவு அக்கிரம வெறியாட்டங்கள் அன்றைய நெருக்கடி