440
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
காலத்தில் நடைபெறுகிற அளவிற்கு அன்றையதினம் நீங்கள் தந்த குற்றச்சாட்டுக்களை, புகார்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்னும் அந்தப் புண் ஆறவில்லை. அது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது எங்கே போய் முடியுமோ நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
ert 18 ஆனால்
ய
ஆனால் நாங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடனே நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் நிருபர்களைச் சந்தித்துச் சொல்கிறார்கள், மற்ற விசாரணைகள் பற்றி, ஏழு குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கச் சொல்லி தங்களுக்கு தாக்கீது வந்திருப்பதாக. ஏற்கனவே வந்த தாக்கீதுகளைத்தான் சொல்கிறார்கள். உடனே அமைச்சர் திரு. பொன்னையன் அவர்கள் சொல்கிறார்கள், கருணாநிதி தப்பித்துவிடமுடியாது, அடுக்கடுக்காக வழக்குகள் போடப்படும் என்று அவர் சொல்கிறார். அதேபோல் நம்முடைய அருமை நண்பர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் சொல்கிறார்கள், கருணாநிதி தப்பவே முடியாது, அவர் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, நான் அப்படிச் சொல்லவில்லை. அதை, ஒரு தலைப்பாக வந்ததை வைத்துக்கொண்டு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று நான் சொன்னதில்லை.
கலைஞர் மு. கருணாநிதி : ஏதோ ஒரு குறிப்பிட்ட காலம். ஏதோ அவர் விரும்புகிற காலம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தளவிற்குச் சொல்லப்பட்டது. ஆனால் அந்த சர்க்காரியா கமிஷனின் ஏழு குற்றச்சாட்டுகள் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்த ஏழு குற்றச்சாட்டுக்களில் சர்க்காரியா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்? ஒரு குற்றச்சாட்டு நாதன் பப்ளிகேஷன்ஸ். அதிலே என்ன அவர்கள் முடிவுரை தெரியுமா?
anas "The Minister, Shri Nedunchezhiyan, was directly re- sponsible for irregularities............
11