உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

Died

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

உரை : 73

நாள் : 26.02.1979

கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த அமைச்சரவையின் மீது அளிக்கப் பட்டுள்ள நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை ஆதரித்தும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சார்பில் தரப்பட்டுள்ள கண்டனத் தீர்மானங்களை ஆதரித்தும் என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

ஒரு அவையிலே, நம்பிக்கையில்லாத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது என்பது ஜனநாயக முறையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் நம்முடைய அமைச்சர்களிலே ஒருவர் பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை யிலே பேசியதாக 25 ஆம் தேதி பத்திரிகையிலே வெளி வந்திருக்கிறது. வேளாண்மைத்துறை அமைச்சருடைய பேச்சு.

"எப்படியாவது அ.இ. அண்ணா தி.மு.க ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று கருணாநிதி துடிக்கிறார். எங்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் கருணாநிதி கூறட்டும். ஜனநாயக முறைப்படி நடக்கட்டும். அதை அதை விட்டுவிட்டு

மக்கள்

4

வரிப்பணத்தைப் பாழாக்கும் நோக்கத்துடன் 6 மாதத்துக்கு ஒருமுறை வீதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார். சட்டமன்றம் நடைபெறும்போது ஒரு மணிக்கு 4 ஆயிரம் செலவாகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து பல மணி நேரத்தை வீணாக்குவதன் மூலம், மக்கள் வரிப்பணத்தைப் பாழாக்குகிறார் பாழாக்குகிறார் கருணாநிதி" என்று கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட வகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத் தையும் கண்டனத் தீர்மானங்களையும் கொண்டுவருவது எந்த