உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

457

ஓய்வில்லாது உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று அங்கே என்னுடைய கல்லறையிலே எழுதப்படுகிற அந்தப் பெயரை ஒருவேளை கடல்கொண்டு அழிக்கலாமே தவிர, வேறு யாரும் அழிக்க முடியாது. எனவே அந்தப் பெயர் நிலைத்தால் எனக்கு போதும் என்கின்ற அந்த உணர்ச்சியோடு இதைச் சொல்லி - இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பல கட்சித் தோழர்களும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். filion on attaim

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே ஏற்பட்ட தவறுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டினார்கள். தவறுகளுக்கு நாங்கள் ஆளாகியிருப்போமானால், அதற்காகத் திருந்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, அந்தக் கட்சி நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு ஆளுங் கட்சியினர் இதைக் கொண்டு வந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆற்றிய உரைக்காக அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இந்த அளவில் என்னுடைய கருத்துக்களை எடுத்துத் தெரிவித்து அமைகிறேன், வணக்கம்.

க்குப்

1000 La