468
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஆம் ஆண்டில் வேலை கொடுத்து விடலாம் என்று தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது. நிலைமை என்ன? அந்த விசேஷத் தேர்விலே, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் ஓராண்டு காலமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். யாருக்கும் வேலை வாய்ப்புகள் இதுவரையில் அளிக்கப்படவில்லை. அவர்கள் பத்திரிகைகளிலே கடிதங்கள் எழுதுவதுமாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மகஜர்கள் அனுப்புவதுமாக இருக்கிறார்கள். நாங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். 3,000 பேர்களும் இன்னும் நிலைப்படாமல் இருக்கிறோம் என்று முறையீடுகள் செய்துகொண்டு இருக் கிறார்கள்.
ய
நான் சேலம் சென்று இருந்தேன் நேற்றைக்கு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 6ஆம் தேதி அன்று சேலத்திற்குச் சென்று மாக்னசைட் தொழிற்சாலை ஒன்றை அரசின் சார்பில் திறந்து வைத்து, அந்தத் திறப்பு விழாவில் பேசியிருக்கிறார்கள். அந்தத் தொழிற்சாலையில் ஏற்கனவே 3,000 தொழிலாளர்கள் வேலையிலே ஈடுபட்டு இருந்தார்கள். அந்தத் தொழிற்சாலையை நடத்தமுடியாத காரணத்தாலோ என்னவோ தனியார் அதை நடத்தாத காரணத்தாலே அரசே அதை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்தது அது பாராட்டத்தக்கது என்றாலும் தொழிலாளர்களுக்கு இந்த அரசு என்ன உரிமை அளித்து இருக்கிறது என்று பார்த்தால் ஏறத்தாழ அந்த 3,000 பேரையும் நாங்கள் தொடர்ந்து வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று அவர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டு இருந்தும்கூட, அதிலே 3,000 பேரையும் அந்தத் தொழிற்சாலையிலே வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. 50 சதவீதத்திற்குக் குறைவாகத்தான் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். பெரிய கொடுமை 20 ஆண்டு காலம், 15 ஆண்டு காலம், 12 ஆண்டு காலம், 10 ஆண்டு காலம் சர்வீஸ் எல்லாம் வெட்டப்பட்டு, அந்த சர்வீஸ் காலம் அவர்களுக்குக் கிடையாது என்ற ரீதியில் புதிதாக வேலையிலே சேர்த்துக் போல இன்றைக்கு அவர்கள்
கொள்ளப்பட்டவர்களைப்
சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு சில நிறுவனங்களை அரசின் சார்பில் எடுத்துக் கொண்ட நேரத்திலும் சரி, கழகம் ஆட்சிப் பொறுப்பில்