உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

469

இருந்தபோது ஈரோடு போன்ற இடங்களிலே மின்சார நிறுவனங் களை அரசின் நிர்வாகத்தில் எடுத்துக்கொண்ட போதிலும் சரி, அதிலுள்ள தொழிலாளர்களை எல்லாம் அப்படியே, எடுத்துக் கொண்டது மட்டுமல்ல; அவர்களுடைய சர்வீஸ் கட் ஆகாமல் சர்வீஸ் வெட்டப்படாமல் எடுத்துக் கொள்ள உத்தரவாதத்தை அளித்தது என்பதை இந்த அரசுக்கு நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அங்கே, தொழிலாளர்கள் இன்றைக்குச் சேலம் மாநகரில் மாக்னசைட் தொழிற்சாலை தொடங்கப்பட்ட நேரத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக எடுக்கப்பட்டிருக் கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எடுத்துவைக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

ஆரம்ப காலத்திலே தொழிலாளர்களுக்குத் தோழனாக இந்த அரசு விளங்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் தொழிலாளர்களுக்குத் தோழனாக விளங்கும் என்று சொன்ன இந்த அரசுதான், அரசினுடைய முதலமைச்சர்தான் ஆளுநர் மூலமாகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைச் சட்ட விரோதம் என்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார் என்பதையும், அதற்குத் தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர் சமுதாயம் பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருந்தது என்பதையும், அந்த அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டது என்பதையும், நாடு அறியும், தொழிலாளர் சமுதாயம் அறியும். எனவே, தொழிலாளர்களுடைய தோழன் என்று பேசிக்கொள்ள இந்த அரசுக்கு எள்ளளவும் தகுதி கிடையாது என்பதை நூற்றுக் கணக்கான உதாரணங்களால் என்னால் கூற முடியும்.

அதைப்போல சென்னைக்கு அருகாமையில் உள்ள டி.ஐ.சைக்கிள் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமளி. அந்தத் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் காவல் துறையின ருடைய அடக்குமுறைக்கும், அதே நேரத்தில் ஆளும் கட்சி யினரும் சேர்ந்து தாக்குவதற்கும் கடுமையாக ஆளாக்கப் பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அங்கே ஏ.ஐ.டி.யு.வைச் சேர்ந்த தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கே.டி.கே. தங்கமணி, கோபு அவர்கள் தலமையில் ஒரு ஊர்வலம் நடத்தி, அமைச்சரைச் சந்திக்க