உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கோட்டைக்கு வருகின்ற நேரத்தில், அவர்கள் கைது செய்யப் படுவதற்குப் பதிலாகத் தாக்கப்பட்டார்கள் போலீஸ்காரர்களால்; ஆளும் கட்சிக்காரர்களால்

மணியும்,கோபுவும்.

தாக்கப்பட்டார்கள் தங்க

அதுமாத்திரமல்ல, அவர்களைத் தாக்கிய ஆளும் கட்சித் தொண்டர்கள், ஹரிபட் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த அந்த பந்தலையும் எரித்து சாம்பலாக்கி விட்டார்கள். இவைகள் எல்லாம் தொழிலாளர் நலனுக்குப் பாடுபடுகின்ற அரசினுடைய சாதனையின் ஒரு கூறு என்று சொன்னால் அது மிகையாகாது.

சிம்கோ மீட்டர் தொழிற்சாலையில் ஏறத்தாழ 100

நாட்களுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது ஒரு போராட்டம். 12(3) செட்டில்மென்ட். இதையே இன்றைக்கு முன்னோடியாக வைத்துக்கொண்டு, அதில் உள்ள முற்றுப் புள்ளியையோ, கமாவையோ மாற்ற இயலாத காரியம் என்று ஏற்கனவே அரசாங்கத்தின் சார்பில், அமைச்சரின் சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்தத் தொழிலதிபர் நான் தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக ஆக்க மாட்டேன்; தற்காலிகத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் 41/2 ரூபாய் சம்பளம் ஆக்க மாட்டேன்' என்கிற ஆணவத்தோடு துணிச்ச லோடு இந்தத் தொழிலாளர்களைப்பற்றி இன்றைக்குப் பேசுகிறார் என்றால், திருச்சி நகரம் தொழிலாளர்களுக்கு இரக்கம் காட்டுகின்ற வகையில் அனுதாபம் தெரிவிக்கின்ற வகையில், பரிவு காட்டுகின்ற வகையில், ஒருநாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும்கூட, ஏன் இன்னும் சிலநாளில் திருச்சி மாவட்டத்திலே அப்பேர்ப்பட்ட கொந்தளிப்பான நிலை தொழிலாளர்களுக்காக ஏற்படும் என்ற நிலை உருவாகி இருந்தும்கூட, ஒரு தொழிலதிபர் 'நான் கொஞ்சமும் இணங்க மாட்டேன்' தொழிலாளர்களுக்கு, அவர்ளுடைய கோரிக்கை களுக்கு விடை தருகின்ற அந்த வேலைக்கு நான் வரமாட்டேன் என்று சொல்கிறார் என்றால் அது அந்தத் தொழில் அதிபர் களுக்கு அரசாங்கம் தருகின்ற மறைமுகமான ஆதரவு, ஆக்கம், ஊக்கம் இவைகளைத் தவிர வேறென்ன காரணம் கூற முடியும்.

அடுத்து, திருச்சி மாவட்டத்திலே கரூரிலே எல்.ஜி.பி. பஸ் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப்