உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

எந்த அளவிற்கு வன்முறையைத் தூண்டிவிட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது

அதே நேரத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான், நம்முடைய நண்பர், ஜனதாக் கட்சியினுடைய தலைவர் திரு.ஜேம்ஸ் அவர்களுடைய அந்தப் பாணியிலே பேச விரும்பவில்லை. திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் செய்த ஏதோ ஒரு குற்றத்திற்காக அவர்களைப் பாராளு மன்றத்திலேயிருந்து விலக்கி 5 நாட்களுக்குச் சிறை யிலே வைப்பது என்கிற முடிவு எடுக்கப்படுகிறது. அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பேகூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நான் நிருபர்களிடத்திலே ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறேன். இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நான் இங்கே இந்த அரசின் அணுகுமுறையைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு கட்சியினுடைய தலைவர் சிறையிலே போடப்படு கிறார் என்ற செய்தி வருமேயானால், அதற்காகப் போராட, கிளர்ந்தெழ, ஆர்ப்பாட்டங்கள் நடத்த, அந்தக் கட்சியிலே உள்ள தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் உரிமை உண்டு. அது பல நாட்களாகப் பல ஆண்டுகளாக நம்முடைய நாட்டிலே நாம் கண்டுவருகிற முறை. அந்த வகையிலே இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிலே அப்படிப்பட்ட கிளர்ச்சிகளிலே ஈடுபட்டார்கள். அவர்கள் ஈடுபட்டது சரி; அது தவறு என்ற அந்த விவாதத்திலே இறங்க விரும்ப வில்லை. அப்போது அவர்களுடைய பத்திரிகையிலே சில நடவடிக்கைகள் பற்றிய செய்தி வெளியிடப்பட்டன. நான் கேட்கிறேன். இப்படிப்பட்ட முறைகளை எல்லாம் அனு மதிக்கக்கூடாது என்று சொல்கின்ற இந்த அரசினுடைய பத்திரிகைகள், அந்தக் காலத்திலே எப்படி நடந்துகொண்டன என்பதைத்தான் நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்பு கிறேன்.

திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்களைத் தண்டிப்பதற்கு முன்பே 1978ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 16ஆம் நாள் அன்று, அண்ணா பத்திரிகையின் முதல் பக்கத்திலே