கலைஞரின் சட்டமன்ற உரைகள்
473
எழுதப்பட்ட செய்தியைப் படிக்கிறேன். "இந்திரா காந்திக்குத் தண்டனை கொடுத்தால் ஏற்படும் கொந்தளிப்பை எப்படி அடக்குவது என்று ஜனதா அரசு யோசித்து வருகிறது. இந்திரா காந்திக்குத் தண்டனை அளிக்கப்பட்டால் அதன் விளைவாக ஏற்படும் கொந்தளிப்பை எப்படி சமாளிப்பது என்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. இந்தப் பிரச்சினை எழுப்பியுள்ள கொந்தளிப்பைக் கண்டு டெல்லி அதிர்ச்சி அடைந்திருக்கிறது." இது ஆளும் கட்சிப் பத்திரிகையிலே வருகின்ற செய்தி. வன்முறைகளைத் தூண்டி விடுகின்ற செய்திகளை வெளியிடுவது நல்லதா?
இது முதல் அமைச்சர் அவர்கள் அடிக்கடி எடுத்துக் கூறுகிற மணிவாசகங்களில் ஒன்று. ஆனால்,அவர்களுடைய பத்திரிகைகளில், கொந்தளிப்பு ஏற்படும். புயல் ஏற்படும், அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும், ஜனதா அரசு திணறுகிறது என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்றால், இந்தச் செயல்களை அவர்கள் மறைமுகமாகத் தூண்டி விடு கிறார்கள் என்று பொருள் அல்லவா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதே பத்திரிகையில் 1978ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 16ஆம் நாள் இரண்டாம் பக்கத்தில் இன்னொரு செய்தி என்ன செய்தி. மாணவர்கள், இளைஞர்கள் ளைஞர்கள் எப்போதும் ஒழுங்காகப் படிக்கவேண்டும் என்று உபதேசம் செய்ய நமது முதலமைச்சர் தவறுவதே இல்லை. ஆனால், அண்ணா பத்திரிகையில் என்ன செய்தி வருகிறது? என்ன அறிவிப்பு தெரியுமா?
“இந்திரா காந்தி மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கும் ஜனதா அரசின் போக்கைக் கண்டித்து இன்று சென்னையிலிருந்து டெல்லி புறப்படும் க்ரான்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் முன் இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் படுத்து மறியல் செய்வார்கள். அணி அணியாகப் போராட்டத் தில் ஈடுபடுவார்கள், இவ்வாறு இனியன் சம்பத் அறிக்கையில் கூறியுள்ளார்."
இது அண்ணா பத்திரிகையில் 1978ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் வெளிவருகிற செய்தி. அப்படியானால் இதையெல்லாம் தூண்டி விடுகிறவர்கள் யார்? நாட்டிலே என்ன