கலைஞரின் சட்டமன்ற உரைகள்
477
மிருக்குமானால் கொடுத்து விடுங்கள். பூட்டோ சொன்னார். "நாளைக்குத் தண்டனை எனக்கு அளிக்கப்பட்டாலும் என்னுடைய சார்பிலும் என் குடும்பத்தின் சார்பிலும் கருணை மனு அளிக்கத் தயாராக இல்லை.” என்று சொன்னார். அதை யேத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். இந்த வழக்கில் இந்திரா காந்தியைக் கொல்வதற்காகக் கருணாநிதியும் அன்பழக னும் சாதிக் பாட்சாவும் மற்றவர்களும் முயற்சித்தார்கள் என்று எங்களுக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டாலும் நாங்கள் அதைப் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக் கிறோம் என்பதை மாத்திரம் இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் இந்த முரண்பாட்டை நாட்டுக்கு விளக்க வேண்டிய வனாக இருக்கிறேன். பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டு 10 பேர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கறுப்புக் கொடி போராட்டத்தில் யாரும் கொல்லப்படவில்லை. சில அசம்பாவிதங்கள் நடை பெற்றன. அதற்காக நான் வருந்துகிறேன். இல்லையென்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அசம்பாவிதம் எப்படி நடந்தது என்ற அந்த ஆராய்ச்சியில் நான் நுழைய விரும்பவில்லை. காரணம் அந்த வழக்கு நீதிமன்றத்திலே இருக்கின்ற காரணத்தால்; ஆனால், அதற்கு ஒரு நியாயம், இதற்கு ஒரு நியாயமா? அதற்காக அவர்கள் மீதெல்லாம் ஒரு சதி வழக்குப் போடுங்கள் என்று நான் கேட்கவில்லை. எங்கள் மீது மட்டும் இப்படித் தொடர்ச்சியாகச் சங்கிலித் தொடர்போல வழக்குப் போட்டிருக்கிறீர்களே, இது நியாயம்தானா என்பதைக் கேட்டுக் கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறேனே தவிர வேறு
அல்ல.
மேலும் சட்டம் ஒழுங்கு அமைதி தமிழகத்திலே எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்முடைய ஜேம்ஸ் அவர்கள் தன்னுடைய தீர்மானத்தை முன் மொழிந்து பேசுகின்ற நேரத்தில் விரிவாகப் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதே அவையில் புட்லூர் தண்டபாணியின் மர்ம மரணம் பற்றி யும், அவர் எந்த விதத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றியும், பல ஆதாரங்களை, அவர் கையெழுத்துக்களோடு கூடிய ஆதாரங்களை அவருடைய துணைவியார் தந்த மனுக்