478
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
களோடு கூடிய ஆதாரங்களை, அவர் எழுதி வைத்த கணக்கில் யார்யாருக்கு எவ்வளவு செலவு செய்து அந்தக் கான்டிராக்டைப் பெற்றிருக்கிறார் என்பதைப் பற்றியும் ஆதாரம் இருந்தது. கொலை செய்யப்பட்டவர் வேறு யாரும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்தான். அவருடைய கொலையைப் பற்றி இவ்வளவு ஆதாரங்களை டுத்துச் சொல்லியும்கூட இதுவரை எந்த நடவடிக்கையாவது எடுக்கப் பட்டதா?
கார்
பேராசிரியரும் மற்றவர்களும் இங்கே இளஞ்செழியன் படுகொலையைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். திருவில்லிப் புத்தூருக்குப் பேசச் செல்லுகிறான் 12 வயது பாலகன் இளஞ் செழியன். பேசி முடித்துவிட்டுத் திரும்பி வருகிறான் மதுரைக்கு, மற்றவர்களோடு. வருகிற வருகிற வழியில் கல்லால் அடித்துக் கொல்லப்படுகிறான். இளஞ்செழியன் காரிலேயே பிணம் ஆகிறான். மிச்சமிருந்தவர்கள், புகார் கொடுக்கின்றார்கள்; போலீஸ் புலன் விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணை முடிவதற்குள் அங்கேயிருக்கின்ற ஆட்சித் தலைவருக்கு அவசரம், கார் மரத்திலே மோதியதால் இளஞ்செழியன் இறந்தான். கார் மரத்திலே மோதியதற்குக் காரணம் கல் வீசப்பட்டது என்கிறார். நான் இப்போது கேட்க விரும்புகிறேன். பேராசிரியர் கேட்டதையே திரும்பக் கேட்கிறேன் மரத்திலே மோதியது இருக்கட்டும். கார் மீது கல் வீசப்பட்டதால் கார் மரத்திலே மோதியது என்று மாவட்ட ஆட்சித் தலைவரே ஒப்புக் கொண்டிருக்கிறாரே, அதற்காகவாவது வழக்கு உண்டா? விசாரணை உண்டா? நடவடிக்கை உண்டா? அந்த மாவட்ட ஆட்சித் தலைவரையும் ஒரு படி மிஞ்சிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள். மதுரையிலே நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் பெரியாரைப்பற்றிப் பேசுவதற்கு முதலமைச்சர் எடுத்துக்கொண்ட நேரத்தைவிட அதிகமாக, இளஞ்செழியனுடைய சாவைப் பற்றி எடுத்துக் கொண்டு, இவரே புலன் விசாரணையில் ஈடுபட்ட பெரிய போலீஸ் துப்பறியும் நிபுணரைப்போல் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அங்கே பேசி இருக்கிறார்; இளஞ்செழியனுடைய சாவு கொலை அல்ல. விபத்துதான் என்று சொன்ன பிறகு எந்த