உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

479

நியாய உணர்வு படைத்த போலீஸ்காரராக இருந்தாலும் தன்னுடைய பதவியை எண்ணிப் பயப்படுவானே தவிர புலன்விசாரணையில் ஈடுபடுவானா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

மாணவர்கள் நிலை என்ன? தியாகராயா கல்லூரிக்கு நுழைகிறார்கள் போலீசார் துணையோடு ஆளும் கட்சிக் காரர்கள்; பச்சையப்பன் கல்லூரிக்குள் நுழைகிறார்கள்; ரகளை ஆகிறது; மாநில கல்லூரிக்குள் செல்கிறார்கள்; ரகளை ஆகிறது. இப்படிக் கல்லூரிக்குக் கல்லூரி காவல் துறையினரின் உதவியோடு ஆளும் கட்சிக்காரர்கள் நுழைந்து மாணவர்களைத் தாக்குகின்ற அவலநிலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொது வேலை நிறுத்தம் நடந்த நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தமன் சைதாப்பேட்டைத் தொகுதியில் தனியாக வருகின்ற நேரத்தில் போலீசாரால் கைது செய்யப் படுகிறார். அப்படி கைது செய்யப்பட்டவரைப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் போலீசார் எங்கே ஆளும் கட்சிக்காரர்கள் நின்று கொண்டிருக்கிறார்களோ, நூற்றுக்கணக்கானவர்கள் இருக் கின்றார்களோ அங்கே அழைத்துக்கொண்டு வந்து, அங்கே ஆளும் கட்சிக்காரர்கள் அவரை நையப் புடைப்பதும், அடித்து தீர்த்துவிட்ட பிறகு, திருப்திதானா என்று கேட்டுவிட்டு, அதன் பிறகு போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுபோய்ச் சிறையிலே அடைக்கப்படுகிறார். அது நியாயம்தானா? முறைதானா? நேர்மை பற்றிப் பேசுவதற்கு இந்த அரசுக்குத் தகுதி இருக் கின்றதா என்று கேட்க விரும்புகிறேன்.

பொது வேலை நிறுத்தம் முடிந்த பிறகுகூட பவானி, ஆப்பக்கூடல் பகுதியில் போலீஸ் லாரியில் ஏற்றப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் இன்னும் காந்தி-காமராஜ் காங் கிரஸ் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்தவர் களையெல்லாம் லாரியில் ஏற்றப்படுகின்ற நேரத்தில், லாரியில் உள்ளவர்களை இழுத்துப்போட்டு ஆளும் கட்சிக்காரர்கள் தாக்கிய கொடுமை நடைபெற்றிருக்கிறது. அதிலே தொழிற்