உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சங்கத்தலைவர் பஷீர் என்பவர் மிகவும் கடுமையாகத் தாக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

உப்பிலிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மன்றங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மன்றங்கள் அடித்துத் தகர்த்து ஏறியப்பட்டன, பொதுவேலை நிறுத்தத்தின் தொடர்பாக.

திருப்பூரில் இவைகளை யெல்லாம் கண்டிக்கின்ற கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிகளி னுடைய கண்டனக்கூட்டம் அது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் அன்றைக்குப் பணியிலே ஈடுபடத் தேவையில்லாத ஒருவர் விடுப்பிலே இருக்கின்ற ஒரு போலீஸ்காரர், போலீஸ் உடை யிலே இல்லாமல், மப்டியில் சைக்கிளில் அந்தப்பக்கம் போய்க் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்த ஒரு பஸ் அதிபரின் மகன் பஸ்ஸை எடுத்துக்கொண்டு கூட்டத்தில் வேகமாக, நுழைந்து இந்தக் கூட்டத்தைக் கலைக் கின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற அந்த நேரத்தில், அந்த மப்டி யிலே உள்ள போலீஸ்காரர் அந்த பஸ்ஸால் அடிக்கப்பட்டுச் செத்திருக்கிறார். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? குற்றத்தை அந்தப் பஸ் அதிபரின் மகன்மேல் இருப்பதை மாற்றி, டிரைவர் மேல் போடலாமா என்கின்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, உரியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பல்லாவரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி ஒருவரை விடுவிக்க வேண்டுமென்று சோடா பாட்டில்கள், கற்கள் அத்தனையும் அந்தக் காவல் நிலையத்தின் மீது வீசப்பட்டன என்ற செய்திகள் வந்தன. மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் விசாரிப்பதற்காக ஒரு ஆளும்கட்சி பிரமுகரை அரியலூர் காவல் நிலையத்திற்குப் போலீசார் அழைத்துச் சென்றபோது, ஆளும் கட்சியினர் நூற்றுக்கணக்கில் அந்தக் காவல் நிலையத்தை முற்றுகை இடுகிறணார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாத அந்தப் போலீசார் இந்தக் கைதியை விடுதலை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

வெளி நாட்டிலே இருந்து அமெரிக்கா போன்ற நாடு களுக்கெல்லாம் சென்று விட்டு, முதல் அமைச்சர் தாயகம் திரும்புகிறார். அவர் தமிழகத்திற்குத் திரும்பித் தலைநகரத்திலே