கலைஞரின் சட்டமன்ற உரைகள்
481
சென்னை மாநகரத்திலே விமான நிலையத்திலே வர வேற்கப்பட்டுக் காலை 10 மணி அளவிலே அண்ணா சிலைக்கு அருகாமையில் போடப்பட்டிருந்த மேடையில் மக்களைச் சந்தித்து உரையாற்றுவார் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால் விமானம் தாமதமாக வருகிறது. முதலமைச்சர் இங்கே வருகிற நேரம் ஏறத்தாழ பிற்பகல் 2 அல்லது 3 மணி இருக்கும். அதற்கிடையில் முதல் நாள் பாங்கோ ஆறுமுகம் என்ற அரிசனத் தோழர் செத்து விடுகிறான். முதல்நாள் செத்துவிட்ட அந்த அரிசனத் தோழனின் பிணத்தைக் காலையிலே எடுத்துக்கொண்டு அந்த வழியாகச் செல்லுகிறார்கள். முன் கூட்டியே போலீசார் அண்ணா சிலைக்கு அருகே கூட்டம் இருக்கின்றது என்று சொல்லித் தடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் போக விட்டுவிட்டார்கள்; அந்தப் பிரேத ஊர்வலம் செல்லலாம் என்ற அளவிலே முதலில் போலீசார் அப்படிப் போக விட்டுவிட்டார்கள்.
பிரேத ஊர்வலம் அண்ணா சிலை அருகே செல்கிறது. அதிலே 50 அல்லது 60 பேர்தான் செல்லுகிறார்கள். அப்போது போகக்கூடாது என்று தடுக்கிறார்கள். போலீசாரும் 'நீங்கள் திரும்பச் செல்லுங்கள்' என்று சொல்லுகிறார்கள். கிராமப் புறங்களில், எனக்கு நம்பிக்கையில்லை சாஸ்திர சம்பிர தாயங்களில் என்றாலும், பல பேருக்கு நம்பிக்கையுண்டு. இறந்தவன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும், உற்றார் உறவினருக்கு அந்த நம்பிக்கை இருக்கக் கூடும். இடுகாட்டுக்குச் செல்லுகிற பிணத்தை அதே வழியில் திரும்ப எடுத்துச்செல்லக்கூடாது என்பது ஒரு ஐதீகம். ஒரு வைதீக மனப்பான்மை, ஆனால் அதற்கும் கட்டுப்பட்டுத் திரும்ப எடுத்துச் செல்லுகிறார்கள். அண்ணா சிலை வழியாக இல்லாமல் பெரியார் சிலை வழியாக வேறு பக்கமாகக் கிருஷ்ணாம்பேட்டைக்குச் செல்ல எடுத்துச்செல்லுகிறார்கள். அவர்களில் 200க்கு மேற்பட்டவர்கள் பிணத்தைத் துரத்திச் சென்று, பிணத்தை வண்டியிலிருந்து கீழே இழுத்துப் போட்டு உதைத்து, மிதித்து கொள்ளிச் சட்டியைப் பிடுங்கிக் கொண்டு, அதை எடுத்துச் சென்ற சிறுவனை உதைத்து, அங்கிருந்த பெண்களை அடித்து, எவ்வளவு தொல்லைக்கு ஆளாக்கியிருக் கிறார்கள். அதற்குப் பிறகு கண்டனக் கூட்டங்கள், அதைப் பற்றிய மறுப்பு அறிக்கைகள் இவ்வளவு வெளி வந்தன.