உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நான் கேட்கிறேன், முதலமைச்சர் அவர்கள் அண்ணா சிலைக்கு அருகில் பேசத் தொடங்குகையில் 'காலையில் சில அசம்பாவிதங்கள் நடந்ததாகக் கேள்விப்பட்டேன், அதற்காக வருந்துகிறேன். அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கிறேன்' என்று இரண்டு மூன்று வாசகங்களை மாத்திரம் சொல்லியிருப்பாரேயானால் அந்தப் பிரச்சினை பெரிதாகவே ஆகியிருக்காது. ஒரு அரிசன சமுதாயத்தைச் சேர்ந்த தோழன், அவனுடைய பிணம் தூக்கி எறியப்படுகிறது. மிதிக்கப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள்; கருணாநிதி பிணம் தின்னும் கழுகு என்று. நான் அவர்களுக்கு மேடையில் பதில் சொன்னேன் 'நான் என்றைக்கும் உங்களைத் தின்றது கிடையாதே' என்று, 'பிணம் அகப்பட்டால் போதுமே, அதை வைத்துக் கொண்டு விளம்பரம் செய்வதுதானே வேலை' என்று பேசுகிறார்கள். எனக்குத் தெரியாதா? நீங்கள் தேர்தல் நேரத்தில் ஒட்டிய போஸ்டர்களை மறந்துவிடவில்லை. அவை பிணங்களின் போஸ்டர்கள் அல்லவா உயிரோடு இருந்தவர் களுடைய போஸ்டர்களையா போட்டீர்கள். அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படுகின்ற நேரத்தில் அதை அரசுக்கு எடுத்துச் சொல்லவும், அரசு அதைக் கண்டிக்கத் தவறினால் மக்கள் மன்றத்தில் எடுத்துச் எடுத்துச் சொல்லவும் கடமைப்பட்டவர்கள். அந்த வகையிலேதான் ஒரு பிணத்திற்குக் கூட இப்படிப்பட்ட கொடுமை நடைபெற்றிருக்கிறதே என்று சட்டம், ஒழுங்கு, அமைதி கெட்ட நிலைமையை அன்றைக்கு நாட்டு மக்களுக்கு நாங்கள் எடுத்துச் சொன்னோம்.

அவைகள் மட்டுந்தானா ஆளும் கட்சிக்காரர்கள் இழைத்த கொடுமைகள்? உத்தமபாளையம் தாசில்தாரை இழிவுபடுத்தி அந்தப் பகுதி ஆளும் கட்சி அமைப்பாளர் அங்கே பேசினார் என்று அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் அரசு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், இந்த ஆட்சிக் காலத்தில் தான். பெண்களிடத்தில் தவறாக நடந்து பிடிபட்டார்கள் சில குண்டர்கள். அவர்களைத் தஞ்சை நகரத்தில் காவல் நிலை யத்தில் அடைத்தார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று ஆளும்கட்சிக்காரர்கள் காவல் நிலையத்தில்