உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

483

நுழைந்து அதிகாரிகளை மிரட்டி அங்குள்ள ரெக்கார்டுகளைக் கிழித்தெறிந்திருக்கிறார்கள். பரமக்குடி தாசில்தார் சம்பவம் பரம ரகசியம் அல்ல. எல்லாருக்கும் பகிரங்கமாகத் தெரிந்த ஒன்றுதான். அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தாசில்தார் மீது என்ன குற்றம் சுமத்த முடியும் என்ற முயற்சி யிலே ஈடுபட்டார்களே தவிர, என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? தேனாம்பேட்டையில் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களைப் பிடித்துச் சென்றார்கள். அவர்களை காவலர்கள் கைது செய்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சிக்காரர்கள் அவர்களைப் பிடித்து அடித்தார்கள். கட்டி வைத்தார்கள். என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?

போலீஸ் லாக்கப்பில் இருந்த உறவினரை, மகனை மீட்க போலீஸ் லாக்கப்பில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. உள்ளே புகுந்து "வெளியே விடுகிறாயா இல்லையா” என்று மிரட்டி மகனை அழைத்து வருகிறாரே என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? இவை எல்லாம் ஆளும் கட்சியினர் நிர்வாகத்தில், நீதியில், சட்டத்தில் தலையிடுகிற காரியங்கள் அல்லவா? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.சு.லட்சுமணன் அவர்கள்மேல் பயங்கரமான வழக்குகளை இந்த அரசு போட்டிருக்கிறது. இதற்கிடையில் அவர் எந்த நேரத்திலும் கொலை செய்யப் படுவார் என்ற அளவுக்கு மிரட்டல் பாணங்கள். சட்டமன்ற உறுப்பினர் ராஜரத்தினம் அவர்கள் வீட்டில் நடைபெற்ற சம்பவம் என்ன? யாரோ குண்டர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல மாட்டேன், யாரோ குண்டர்கள் ராஜரத்தினம் வீட்டில் நுழைந்து அவரை அடித்தார்கள், காயப்படுத்தினார்கள். ராஜரத்தினம் நான்கு பேர் மீது புகார் செய்தார். புகார் செய்த உடனே நான்கு பேரைக் கைது செய்தார்கள். நான்கூட மகிழ்ச்சியடைந்து பத்திரிகைக்கு செய்தி வந்தபோது துணையாசிரியர்களிடத்தில் “அண்ணா தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் என்று போடாதீர்கள்” என்று சொன்னேன். ராஜ ரத்தினமே 'குண்டர்கள்' தாக்கினார்கள் என்று சொன்ன செய்தியை அப்படியே போடுங்கள் என்றுகூடச்