உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சொல்லி அனுப்பினேன். அப்படித்தான் செய்திகூட முரசொலிப் பத்திரி கையில்கூட போடப்பட்டது.

என்ன நடந்தது? 4 பேர்களைக் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள்

உடனடியாக ஜாமீனிலே விடப்படு கிறார்கள். ஆனால், அகில இந்திய அண்ணா தி.மு.க அல்ல, ஆனாலும் திரு. ராஜரத்தினம் அடிபட்ட காரணத்தால், அடித்த வர்களுக்குச் சிபாரிசாக ஆளுங்கட்சிக்காரர்கள் வருகிறார்கள் திரு.ராஜரத்தினம் மருத்துவமனையிலே அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையிலே இருக்கிற அடிபட்டவரை உடனடியாகக் கைது செய்கிறார்கள். ஜாமீனிலே வெளியே வரமுடியாதபடி 326 செக்ஷனில் போட்டு அவரைக் கைது செய்கிறார்கள் அடிபட்டவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் அடித்தவர்கள் உடனடியாக ஜாமீனிலே விடப்படுகிறார்கள்.

முருகையனுடைய கொலை வழக்கு. சேலத்திலே நம்முடைய முதலமைச்சர் பேசிய பேச்சை டேப் ரிக்கார்டிலே கேட்டு விட்டு அதற்குப் பிறகுதான் சேலத்திலே பொதுக் கூட்டத்திலே நான் பேசியிருக்கிறேன். முருகையன் என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பேசியதாக அறிந்தேன். முருகையன் “என்பவராக" ஆக்கப்பட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன். வாய்தவறி வந்த வார்த்தையாக இருக்க லாம். ஆனால் முருகையன் "என்பவர்” அல்ல, சோவியத் போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்தவர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிலே ஒருவர், நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அவர் கொலை செய்யப் பட்டிருக்கிறார். அந்தக் கொலைக்கு ஒரே ஒரு ஆள் தான் காரணம் என்று அங்கே இருக்கிற டி.ஐ.ஜி தேவாரம் என்பவர் பிடிவாதமாகச் சொல்லி வருகிறார். அன்றைக்கு அன்றைக்கு அவை முன்னவர்கூட எதிர்க்கட்சித் தலைவர்களிடத்திலே வாக்களித்தார். என்னை நம்புங்கள் என்று. பேராசிரியர் பேசும்போது கேட்ட நேரத்திலே கூட அதற்கு முன்னவர் பதில் சொல்கிறபோது கொலைகாரர்களைச் சும்மாவிடமாட்டோம். ஆளுநர் உரையிலே வருகிற வாசகத்தைச் சொன்னார்கள். ஒரு வரல்ல, பலர்தான் என்று எடுத்துச் சொன்னபோதுகூட பலராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம் என்று வாக்களித்தார்கள். அவர்கள் சொன்னது