உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

485

எனக்குச் சற்று மகிழ்ச்சியை அளித்தாலும், பலரால் கொலை செய்யப்பட்டதாக அந்தப் பகுதிமக்கள் அனைவரும் சொல்கிறபோது, கொலை செய்தவர் ஒரே ஒரு ஆள்தான் என்று டி.ஐ.ஜி பிடிவாதமாகச் சொல்கிறார். 37 இடங்களிலே குத்திக் செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவ விசாரணை சர்டிபிகேட் என்ன சொல்கிறது?

கொலை

முடிந்தால் அவையிலே வையுங்கள் பார்க்கலாம். முத்துப்பேட்டையிலே உள்ள டாக்டர் என்ன சொல்கிறார். நான்கிற்கு மேற்பட்ட பல்வேறு ஆயுதங்களால் முருகையன் உடலிலே காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நான்கிற்கு மேற் பட்ட ஆயுதங்கள் என்றால் குத்திய போஸ் என்ன பிரம்மாவா? நான்கு கைகளிலே நான்கு ஆயுதங்களை வைத்துக்கொண்டு குத்த, இல்லை, அவர் மனிதர். இரண்டு கைகள்தான். ஒரு கையால்தான் குத்தமுடியும். 37 குத்துக்களை வாங்கிப் பிணமாக விழுகிறார். முருகையன், நாடாளுமன்ற உறுப்பினர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களிலே ஒருவர். முதலமைச்சர் சென்று இரங்கல் தெரிவிக்கிறார். அதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் என்ன? 4,5 பேர்கள் இதிலே ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அந்தப் பகுதியிலே உள்ள மக்கள் அத்தனைபேரும் சொல்லியும்கூட தேவாரம் சொல்கிறார் இல்லை, இல்லை ஒரே ஒரு ஆள்தான் என்று. தேவாரம் சென்னைக்கு வருகிறார். யாரைச் சந்திக்கவோ நான் அறியேன் பராபரமே. அவர் நிருபர்களைச் சந்திக்கிறார், நிருபர்கள் கேட்கிறார்கள். 37 இடங்களிலே குத்தப்பட்டிருக்கிறாரே? ஒரே ஒரு ஆள் மீதுதான் வழக்கா என்று. தேவாரம் பதில் சொல்கிறார். குத்தியவரே சொல்கிறாரே என்று குத்தியவரையே ஒத்துக்கொள்ளவைத்து விட்டு, இந்தச் சதியிலே ஈடுபட்டிருக்கின்ற மற்றவர்களை விடுவிப்பதற்கான பயங்கரமான சதி நடக்கிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. முருகையன் கொலையைப் பற்றி முருகையனின் மனைவியினிடத்திலேகூட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. உங்களுடைய கணவர் என்றைக்கு ஊருக்குச் சென்றார். என்றைக்குத் திரும்பி வருவதாகச் சொன்னார். அவருக்கும் மற்றவர்களுக்கும் தகராறு உண்டா என்று கேட்டிருக்க வேண்டாமா? முருகையன் அவர்களுடைய