உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

487

செய்யப்பட்டார்

நடைபெற்றது குறித்து ஒருவர் கைது என்றவுடன் உங்கள் கட்சிப் பத்திரிகை என்ன செய்தி வெளியிடுகிறது? கைது செய்த போலீஸ்காரர் கருணாநிதிக்குச் சொந்தக்காரர் என்று, எனக்கே தெரியாத ஒரு இரகசியத்தை அவர்கள் வெளியிடுகிறார்கள்; ஒருவேளை என்னுடைய இனத்தவராக இருக்கலாமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் ரிமாண்ட் மனு கொடுத்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ் பெக்டர் அல்ல சொந்தக்காரர் பட்டியலில் வருபவர் அல்ல. பக்கத்திலே இருக்கின்ற ஊரைச் சேர்ந்த நடராஜன் என்ற இன்ஸ்பெக்டர் கொடுத்திருக்கிறார். அதிலே உளி வீசிய செபாஸ்டியன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? 'ஆமாம் கருணாநிதி மீது உளி வீசியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரன்தான், இருந்தாலும் நாங்கள் அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என்று சொன்னால் ஆளுங்கட்சிக்குப் பெருமைதரக்கூடிய காரியமாக இருக்காதா? அடிக்கடி சொல்வீர்களே, பாலசுந்தரம் கொலை! பாலசுந்தரம் கொலை என்று, அந்தப் பாலசுந்தரத்தைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் யார்? திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாசிலாமணி என்ற மாணவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மற்ற மூன்று மாணவர்களும் என்றல்லவா குற்றம்சாட்டப்பட்டார்கள். அவர்களை உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அறிவித்தோமா? அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? அவர்கள் ஆயுள் தண் டனை பெற்று வேலூர் சிறைக்குள் இன்றைக்கு அடைபட்டுக் கிடக்கவில்லையா? எனவே, 'ஆமாம், சபாஸ்டியன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்' எதிர்க்கட்சித் தலைவர்மீது உளி வீசியதற்காக நாங்கள் அவனைச் சட்டப்படி தண்டிப்ப தற்காக வழக்குத் தொடர்ந்திருக்கிறோம் என்று சொன்னால் உங்களுடைய பெருமை என்ன குறைந்தாவிடப் போகிறது? அதை ஏன் பூசி மெழுகப் பார்க்கிறீர்கள்? அதை ஏன் கேலி செய்கிறீர்கள்? உளி வீச்சு ஒரு கதை என்கிறீர்கள், உளி வீச்சு