உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஒரு நாடகம் என்கிறீர்கள். ஆளுங்கட்சி பத்திரிகையே எழுது கிறது. "இப்போது கருணாநிதி புதிதாகத் தொடங்கியிருக்கிற உளி நாடகம் அந்த மேடையில் எத்தனை நாட்களுக்குத் தொடருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தென்னகத்திலும், "உளி வீச்சு நாடகத்தை வைத்து கருணாநிதி கும்பல் செய்து வருகிற அரசியல் மோசடி அம்பலமாகும்' என்று அண்ணா பத்திரிகையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

(

நான் இன்னொரு பத்திரிகையையும் படித்துக்காட்ட விரும்புகிறேன். அவையிலுள்ளவர்கள் மன்னிக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன். இது இந்தச் சட்டமன்ற கோட் டைக் கொத்தளத்திற்குள்ளேயே படிப்பகத்திலே அனுமதிக்கப் பட்டிருக்கின்ற பத்திரிகை, அதனால் இதைப் படிப்பது தவறாகாது. தலைவரவர்களே! நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் அனுமதியோடு படிக்கிறேன்.

“பராக்! பராக்!! சர்வ கட்சிக் கூட்டம்

உளி வீச்சைக் கண்டித்து மன்னை நாராயணசாமி 9 நாள் உண்ணாவிரதம்!

அன்பில் தர்மலிங்கம் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் வேட்டியில்லாமல் தீக்குளிப்பு!!

கம்யூனிஸ்ட் மாணிக்கம் மழுங்கிப்போன அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொள்ளுதல்!

உளி வீச்சு சம்பவத்தைக் கண்டித்து அப்துல் சமதுபாயின் மீண்டும் ஒரு சுன்னத்!

பார்வர்டு பிளாக் ஆண்டித் தேவரின் உடன்கட்டை

ஏறுதல்!

வி.பி.சித்தனின் பத்து நாள் பத்திய சாப்பாடு!

குசேலரின் கழுமரம் ஏறுதல்!

சுந்தர்ராஜனின் சுண்ணாம்புக் காளவாயில் குதித்தல்

குமரி அனந்தன் குமரியிலிருந்து சென்னைவரை தலை யாலே நடந்து வருதல்!”