உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பணியாளர்களுக்கும், இதைப்பற்றித் தகுந்த அறிவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இந்த சுற்றறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தச் சுற்றறிக்கையிலே சொல்லப்படுகின்ற, பெரிய அதிகாரிகளுடைய நண்பர் என்று கூறிக்கொள்கின்ற இந்த நபர் யார்? அவரைப் பற்றி இதே மாமன்றத்தில், கடந்த ஆண்டு என்று கருதுகின்றேன், பாபா என்று பெயரைக் குறிப்பிட்டு, அவர் மூலம் 40 இலட்சம் ரூபாய் கைமாறிய கதையை நான் எடுத்துச்சொன்னேன். அப்போது அதற்கு எந்தவிதமான பதிலையும் முதலமைச்சர் அவர்கள் இங்கே அளிக்கவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ப்படித் தனியாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட பழனி பாபாவுடன் தொடர்புடைய அதிகாரிகள் யார் என்று இந்த அரசுக்குத் தெரியாதா? இதோ இந்தப் புகைப்படத்தில் நம்முடைய ஐ.ஜி. பரமகுரு. அவர் துணைவியார். அவருக்குப் பக்கத்திலே பழனி பாபா நிற்கிறார். எப்படி நிற்கிறார்? பரம குருவின் தோளில் கைபோட்டு நின்றுகொண்டிருக்கிறார். ஏதோ பெஸ்டிவலில் அல்லது ஏதோ வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படமென யாரும் கருதக்கூடாது. வீட்டிலே எடுக்கப்பட்ட படம். அதுவும், ஐ.ஜி பரமகுரு தோளிலே கையைப் போட்டுக் கொண்டு, பழனி பாபா பரவசத்தோடு இருக்கும் படம் இது.

ஜி

ஐ.ஜி மாத்திரமல்ல. சில முஸ்லீம் பிரமுகர்களைச் சந்திக்கின்ற போது, பழனி பாபாவுடன் இருப்பது யார் என்று பார்த்தால், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ராஜா முகமது அவர்கள். பழனி பாபா அவர்களோடு அமைச்சர் நின்று கொண்டிருக்கிறார். இதுவும் எங்கேயோ விசேஷத்திலோ, வைபவத்திலோ எடுக்கப்பட்ட படம் அல்ல. சில முஸ்லீம் பிரமுகர்களோடுப் பழனிபாபா நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ராஜா முகமது அவர்களைச் சந்தித்துப் பேசிய நேரத்திலே எடுக்கப்பட்ட படம்

அது மாத்திரமல்ல. இன்னொரு படம். நம்முடைய முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார். முதலமைச்சருக்கு நேராக