உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

523

பழனி பாபா எப்படி உட்கார்ந்திருக்கிறார். பார்க்க வேண்டும். பக்கத்திலே சரிசமானமாக உட்கார்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. நம்முடைய முதலமைச்சர் மேலே பாய்ந்து விழுவது போல், அவருடைய உதடு வரையில் கையை நீட்டிப் பேசுகின்ற பாவனை இந்தப் படத்தில் அமைந்திருக்கின்ற காட்சி இந்தப் பழனி பாபா எந்த அளவிற்கு இந்த அரசாங்கத்திலே ஆதாயங்களைப் பெற்றிருக்கிறார் என்பதற்குப் பல ஆதாரங் களை என்னால் சொல்லமுடியும். வக் போர்டு சார்பாக அவர் ஒரு பெரிய பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். நம்முடைய அமைச்சர் பொன்னையன் அவர்களுக்கும், அவருக்கும் தொடர்பு உண்டு என்பதை இந்தக் கலர் படம் வண்ணப்படம் காட்டிக்கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் அக்கேஷன லாக நடைபெற்ற சம்பவம் அல்ல. இந்த அரசினுடைய அதிகாரிகளிடத்தில் இந்தப் பழனி பாபாவுக்கு எவ்வளவு தொடர்பு இருக்கின்றது என்பதை நான் நம்முடைய கம்யூனிஸ்ட் தோழர்களின் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டுவர விரும்புகிறேன். நாங்களும், நீங்களும் சேர்ந்து தொழி லாளர்கள் வதைக்கப்படுகின்றார்கள், என்ற காரணத்திற்காக ஒரு பந்த் நடத்தினோம். அந்தப் பந்த் நடத்திய மறுநாள், பழனி பாபா நம்முடைய போக்குவரத்து அமைச்சர் பொன்னையன் அவர்களோடு பேசுகிறார். சர்க்காருடைய அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளிடத்திலே பேசும் போதே, டேப் செய்யக் கூடியவர் பழனி பாபா அவர்களிடத் திலே ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நம்முடைய ஹர்த்தால் நடைபெற்றது; வேலை நிறுத்தத் திற்கு கடை அடைப்புக்கு மறுநாள் பழனிபாபா அமைச்சர் பொன்னையனோடு பேசுகிறார். படிக்கிறேன். கேளுங்கள். தேவைப்பட்டால் சபாநாயகரிடம் அந்த டேப் ரெக்கார்டைப் போட்டுக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்.

'ஹலோ’

பொன்னையன்: எஸ்

பாபா சொல்கிறார்: Can I speak to the Transport Minister?