உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பொன்னையன்: பாபா, Good Morning. How are you?

பாபா: Fine, ரொம்ப நேரமாக ட்ரை கொண்டிருந்தேன். எங்கேஜ்டு ஆக இருந்தது

பண்ணிக்

பொன்னையன்: நேற்றெல்லாம் நம்ப கட்சித் தொண்டர் களை வீட்டுக்கு வரவழைத்து எல்லா 14 தொகுதி அமைப் பாளர்களையும் கஷ்டப்பட்டு இரண்டு நாளாக உழைத்தார்களே அவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு சின்ன பார்ட்டி கொடுத்து அனுப்ப மணி இரண்டே முக்கால் (என்ன பார்ட்டி தெரிகிறதா)

(பதினான்கு அமைப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கப்படுகிறது. அமைச்சர் பொன்னையன் அவர்கள் வீட்டில்)

பாபா: அப்படியா?

பொன்னையன்: அப்பறம் படுத்தது மணி 3 ஆச்சு. 3 மணிக்குப் படுத்தால் ரொம்ப டயர்டு. டேக்கிங் ரெஸ்ட். பாபா: நான் தலைவரோடு மதுரையில் இருந்துவிட்டு வந்தேன்.

(தலைவர் என்றால் முதலமைச்சர்)

அப்புறம் முஸ்லீம் காலேஜ், லேடிஸ் காலேஸ்... பொன்னையன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வீரப் பிரதாபங்களைப் பேசுகிறார்)

பொன்னையன்: Party candidates on one side have volunteered tremendously through out the state, the police as a second cadre. They did very particularly...

நான் சொல்லிவிட்டேன், தலைவரிடம் சிறப்பாகக் காவல் துறையினர் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரர்களும் செய்திருக் கிறார்கள்.

(என்ன செய்திருக்கிறார்-கடை அடைப்பில் நம்மை அடித்தார்கள் அல்லவா? அது)

பாபா: ஒண்டர்ஃபுல்

பொன்னையன்: ரியலி...!