உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

537

வில்லை. எனவே, டெலக்ஸ் மூலமாகச் செய்தி அனுப்பியிருக் கிறார்கள். உடனடியாக நீங்களாவது அவரோடு தொடர்பு கொண்டு அவருக்குத் தெரிவிக்கவேண்டுமென்று நடராஜ னுக்கு ஹாம்பர்க்கிலிருந்து வருகிறது என்றால், விஸ்வநாதனுக் கும், இந்த மேற்கு ஜெர்மனி நாட்டு கப்பல் வாங்குவதாக இருந்த கப்பல் பேரத்திற்கும், எவ்வளவு தொடர்பு என்று நான் முன்பு சொன்ன குற்றச்சாட்டிற்கு இது ஆதாரம் இல்லையா என்று து எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் அன்றைக்கு சட்டமன்றத் திலே கூறியபடி, பல்கேரியாவில் இருந்து கப்பல் வாங்க உத்தேசிக்கப்படுகிறது. அது ஒரு பெரிய வரலாறு. பல்கேரியா விலிருந்து கப்பல் வாங்குவதற்கான கடிதப் போக்குவரத்து 3-2-79 அன்று ஆரம்பம் ஆகிறது.

பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பொரேஷன் சேர்மன், எம்.டி. எச்.எம்.சிங், போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு.பாங்கோ வுக்கு எழுதுகிறார்கள் அந்தக் கடிதத்திலே எழுதியிருக் கிறார்.“பல்கேரியாவிலிருந்து வாங்க வேண்டிய கப்பல் 10.5 மில்லியன் டால (ரூ.8.40லட்சம்) ரிலிருந்து 10.75 மில்லியன் டாலர் (ரூ.8.60 லட்சம்) வரையிலே விலை கொடுக்கலாம் என்றும் சேர்மன் பேச்சு வார்த்தைகளை 10.5 மில்லியன் டாலரில் (ரூ.8.40 லட்சம்) இருந்து விலையைத் தொடங்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு ஆதாரம் இருக்கிறது; இதிலே குறிப்பிடப்பட்டிருக்கிற 3வது ஆதாரத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

எச்.எம்.சிங். எழுதியுள்ள அவரது கடிதத்தில் சி.வி. சுப்பிரமணியம் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சுப்பி, சுப்பி என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற அவர் எப்படி மத்தியில் பாலா பாலா என்று செல்லமாக அழைக்கப் படும் பாலசுப்பிரமணியம் என்று ஒருவர் இருக்கிறாரோ, அதைப்போல் சுப்பி, சுப்பி என்று செல்லமாக அழைக்கப் படுகிற சுப்பிரமணியம் என்பவர் மெக்கனாஸ் அண்ட் மெக்கனீஸ் என்கிற ஷிப்பிங் ப்ரொக்கர்ஸ் கம்பெனியின் எக்சிகியூட்டிவ்வாகச் சில காலம் இருந்தவர். அது மாத்திரம்